Newskadai.com
அரசியல் இந்தியா

இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடையா..?

Share this:

மத்திய அரசின் புதிய சமூக வலைதள விதிகளுக்கு கட்டுப்படாமல் இருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படும் என்ற தகவல் பயனீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிராக தகவல்கள் பகிரப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, ஓ.டி.டி. தளங்கள் உட்பட அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த பிப்ரவரி மாதம் ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்த விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது.

முன்னதாக மத்திய அரசின் புதிய விதிகளை அமல்படுத்த ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் 6 மாத காலம் அவகாசம் கேட்டிருந்தன. ஆனால், அமெரிக்காவில் உள்ள தலைமை நிறுவனங்களிடம் இருந்து இன்னும் எந்த அறிவுறுத்தல்களும் இந்தியாவில் உள்ள அதன் நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. இதில், இந்தியாவை சேர்ந்த கூ ஆப் மட்டும் புதிய சமூக ஊடக வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதாக தெரிவித்துள்ளது.

இதனால் புதிய விதிகளுக்கு இணங்காத அனைத்து  சமூக ஊடகங்களுக்கும் தடை விதிப்பது மட்டுமின்றி குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக நாளை முதல் இந்தியாவில் டிவிட்டர்,பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Share this:

Related posts

“தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை”… அமைச்சர் செங்கோட்டையன் உறுதி….!!

AMARA

சூடுபிடிக்கும் தமிழகத் தேர்தல் களம்… கட்சி தாவும் பிரபலங்கள்…

MANIMARAN M

தடுப்பூசிக்கு இனி கவலையில்லை முத்துவேல் கருணாநிதி மு.க.ஸ்டாலின் அதிரடி

NEWSKADAI

கொரோனா பீதி: கைவிடப்பட்ட முதியவர் சடலம்… கண்டுகொள்ளாத சுகாதாரத்துறை… இறுதியில் அரங்கேறிய அவலம்… வீடியோ…!!

MANIMARAN M

பிரணாப் முகர்ஜி உடலுக்கு இன்று இறுதி சடங்கு…. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நல்லடக்கம்…!

AMARA

பயங்கரவாதிகள் – ராணுவத்தினர் இடையே கடும் மோதல்… 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!

THAVAMANI NATARAJAN