Newskadai.com
லைஃப் ஸ்டைல்

2021 ஜூலை முதல் “வொர்க் பிரம் ஹோம்”… ஃபேஸ்புக் நிறுவனத்தின் அசத்தலான அறிவிப்பு…!

Share this:

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியை தொடர அனுமதி அளித்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளை வாட்டி வதைக்கும் கொரோனாவின் தாக்கம் என்று முழுமையாக குறையும் என்பது தெரியவில்லை. இதுவரை கொரோனாவிற்கு எதிராக அதிகாரப்பூர்வ தடுப்பு மருந்துகள் எதுவும் வெளிவாராத நிலையில், தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெரு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்டு இயங்குவது சிரமமான விஷயமாக மாறியுள்ளது.

Facebook
 

 

மேலும் படிக்க: http://கொலையா? தற்கொலையா?… சிபிஐ கைக்கு போன சுஷாந்த் மரண வழக்கு…!!

இதனால் பல தனியார் மென் பொருள் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியை தொடர அனுமதி அளித்துள்ளது. அதன் படி ஃபேஸ்புக் நிறுவனம் வரும் 2021ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி அளித்துள்ளது.

மேலும் படிக்க: http://கல்வி கொள்கையின் மாற்றத்தை அனைவரும் ஏற்க வேண்டும்… புதிய கல்விக்கொள்கை மாநாட்டில் பிரதமர் மோடி உரை…!!

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதாவது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தீவிரம் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டின் இறுதி வரை அலுவலகங்களை திறப்பது சாத்தியமில்லை. கொரோனா தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் குறைவான பணியாளர்களை கொண்டு அலுவலகங்கள் திறக்கப்படும். மேலும் நிபுணர்களின் வழிகாட்டுதலின் படி, 20201ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதித்துள்ளோம். இதற்காக வீட்டு அலுவலக தேவைகளை பூர்த்தி செய்ய இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

சேமிக்கிற காசை டபுளாக்க இப்படியெல்லாம் வழியிருக்கா?… இதுவரைக்கும் இதெல்லாம் தெரியாமல் போச்சே…!

NEWSKADAI

ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்… எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

THAVAMANI NATARAJAN

இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு எல்லாம் செம்ம தூளுங்க… ராசி பலன் சொல்லுறத கேளுங்க…!!

NEWSKADAI

பக்தர்களின்றி இன்று துவங்கும் வேளாங்கண்ணி திருவிழா..

MANIMARAN M

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

THAVAMANI NATARAJAN

வந்தாச்சு ஸ்மார்ட் கிளாஸ் டாய்லெட்… இனி கிளீனாக இருக்கான்னு உள்ள போய் பார்க்க வேண்டாம்…!!

MANIMARAN M