லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகம் ஒன்றில் பெரும் சத்தத்துடன் ஏற்பட்ட தீ விபத்து கண்ணிமைக்கும் நேரத்தில் பெரும் வெடி விபத்தாக மாறி ஒட்டுமொத்த துறைமுகமே வெடித்து சிதறி சின்னாபின்னமானது.
இதுகுறித்து லெபனான் நாட்டின் செய்தி நிறுவனங்கள் துறைமுகத்தில் உள்ள ஒரு கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் வெடி விபத்தாக மாறியுள்ளது என்றும் அந்த கிடங்கு பட்டாசுகள் சேமித்து வைக்கும் கிடங்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மிகப்பெரிய வெடி விபத்தால் கட்டிடங்கள் இடிந்து நொறுங்கி பலர் காயமடைந்துள்ளனர். இந்த காணொளி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது குறித்து லெபனான் நாட்டின் புலனாய்வு முகமை, இது சாதாரண விபத்தா அல்லது தீவிரவாத செயலா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சியூட்டும் வெடி விபத்து வீடியோ இதோ…