Newskadai.com
தமிழ்நாடு

21, 22-ஆம் தேதிகளில் மத்திய கூட்டுறவு வங்கி, வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உதவியாளர் பணிக்கான தேர்வு…

bank assistant
Share this:

தமிழகத்தில் 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் 4500- க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு மையத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளன. மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு மொத்தம் 2000 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவற்றில் 1682 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்திருந்த 1337 பேர்களில் 1127 பேருடைய விண்ணப்பங்கள் தகுதி உடையவையாக ஏற்கப்பட்டுள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 21, 22- ஆம் தேதிகளில் நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் 114 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

co operative bank

மேலும் படிக்க : நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும்… பலவீனத்தை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம்…

மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு வரும் 21- ஆம் தேதி நடக்கிறது. இத்தேர்வு அம்மாபேட்டையில் உள்ள கணேஷ் கலை அறிவியல் கல்லூரி, ஜெய்ராம் கல்லூரி, ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, கோட்டை மகளிர் பள்ளி ஆகிய 4 மையங்களில் நடக்கிறது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நவ., 22- ஆம் தேதி கணேஷ் கலை அறிவியல் கல்லூரி, ஜெய்ராம் கல்லூரி, ஜெய்ராம் பப்ளிக் பள்ளி ஆகிய 3 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டை www.drbslm.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

பெரம்பலூரும், தென்காசியும் விரைவில் கொரோனா இல்லாத மாவட்டமாகும்… மற்ற மாவட்டங்களின் நிலை..?!

NEWSKADAI

அதிபர் வீட்டில்  வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள்..!!!

THAVAMANI NATARAJAN

பெத்த தாய் பார்க்குற வேலையா இது?… கணவனுடன் ஏற்பட்ட சண்டையால் மனைவி செய்த கேவலமான காரியம்…!

THAVAMANI NATARAJAN

வாடகை கேட்ட வீட்டு உரிமையாளருக்கு கத்திக்குத்து..!!!

THAVAMANI NATARAJAN

தமிழக மக்களே உஷார்: 15 மாவட்டங்களை பதற வைக்கப்போகும் மழை…!!

THAVAMANI NATARAJAN

திருநங்கைகளை கொலை செய்த கொலையாளிகளை தட்டித் தூக்கிய நெல்லை போலீசார்… திடுக்கிடும் தகவல்கள்…

MANIMARAN M