Newskadai.com
அரசியல்

பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை…!!

Share this:

கர்நாடக காவல்துறையில் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய கம்பீரமும் அதிரடி நடவடிக்கைகளும் அவரை கர்நாடகா சிங்கம் என புகழ வைத்தது. அப்படி கெத்தாக சுற்றியவர் திடீரென அதிலிருந்து விலகியது ஏன் என்ற கேள்வி, தமிழக அரசியலில் இறங்கி ஒரு கலக்கு கலக்க முடிவெடுத்துள்ளதாக அப்போது தகவல்கள் கசிந்தன. ஆனால் அதுகுறித்து அண்ணாமலை அப்போது எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை.

இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் இவர் தான் முதல்வர் வேட்பாளர் என அனைவரும் பேசத் தொடங்கினர். ஆனால் அவரோ எனக்கும், அரசியலுக்கும் சம்மந்தமே கிடையாது என்பது போல் இயற்கை விவசாயம் செய்து வந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூட எனக்கு பிரதமர் மோடியை மிகவும் பிடிக்கும் எனக்கூறி ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதே சமயத்தில் ரஜினிக்கு ஆதரவாகவும் பேசி குழப்பி வந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளதாக அவரே அதிகாரப்பூர்வ அறிவித்திருந்தார். மேலும் ரஜினி கட்சியில் சேராதது ஏன்? என்றும் பின்னர் விரிவான அறிக்கை வெளியிடப்பட்டும் என தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர ராவ் மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை குப்புசாமி பாஜகவில் இணைந்தது ரஜினி ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

நீட் தேர்வை நடத்த முடியாதுன்னு அறிவீங்க… அடுத்தடுத்து அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஸ்டாலின்…!!

AMARA

சீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும். – மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்.

NEWSKADAI

நீங்க ஊரடங்கை நீட்டிச்ச வரைக்கும் போதும்…. உடனே எல்லாத்தையும் ஓபன் பண்ணுங்க… கொந்தளித்த வைகோ…!!

MANIMARAN M

மாஸ்க்கை வைத்து மாஸ் காட்டும் திமுக….நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நூதன போராட்டம்…!!

AMARA

இந்தி தெரியாத மாநிலங்கள் நாட்டை விட்டு வெளிய போங்கன்னு சொல்லிடுவீங்களா?… பொங்கியெழுந்த சீமான்…!!

MANIMARAN M