Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

ம.பி முதல்வர் போல அதிரடி காட்டுங்க… எடப்பாடியாரை உசுப்பேத்தும் ராமதாஸ்…

Share this:

தமிழகத்தில் காலியாக உள்ள மத்திய மாநில அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது. நாம் தமிழர் கட்சி சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் ஆகியோர் இக்கருத்துகளை வலியுறுத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டங்கள் நடைப்பெற்றது. சென்னை வளசரவாக்கத்தில் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் வட இந்தியர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே தமிழக வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்றும் இது குறித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி உடனடி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இதற்கிடையில் நேற்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மத்திய பிரதேசத்தில் அரசு வேலைகள் மாநில இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். மத்திய பிரதேசத்தின் வளங்கள் மத்திய பிரதேசத்தின் குழந்தைகளுக்கு மட்டுமே” என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “மத்தியப் பிரதேசத்தில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் அம்மாநில மக்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டிலும் அதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டு, சட்டமியற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்!” என்று வலியுறுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Share this:

Related posts

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நடக்கப்போவது இதுதான்… வெளியானது எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

எப்படியிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்… தேமுதிக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!

AMARA

+1 மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்…

MANIMARAN M

காசு கொழுத்துபோன நித்யானந்தா… கைலாசாவுக்கு தனி பேங்கு தெறக்கப்போறாராம்…

THAVAMANI NATARAJAN

“முதல்வர் எவ்வழி நாங்களும் அவ்வழியே”…. வேளாண் மசோதா குறித்து அமைச்சர் சொன்ன அதிரடி கருத்து…!!

AMARA

“சீமானை சும்மா விடமாட்டேன்”… தெருக்கோடியில் உட்கார்ந்து சபதம் போட்ட விஜயலட்சுமி…!!

AMARA