Newskadai.com
தமிழ்நாடு

கோடிக்கணக்கில் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம்… சிக்கிய அதிகாரி..!!

Vellore vigilance raid
Share this:

வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மை பொறியாளராக பணியாற்றி வருகிறார் பன்னீர்செல்வம். இவர் மீது தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட அங்கிகாரம் பெறுவதற்காக அதிகளவு லஞ்சம் பெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் பன்னீர்செல்வத்தை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டனர்.

Vellore vigilance raid

இந்நிலையில் வேலூர் காந்தி நகரில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த மனுக்கள் மீதான பரிசீலனை குறித்து அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் லஞ்சப் பணம் பரிமாற்றப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பன்னீர் செல்வத்தை பின் தொடர்ந்தனர். கூட்டம் முடிந்து புறப்பட்ட பன்னீர் செல்வம் ராணிப்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லாமல் காட்பாடி காந்தி நகரில் உள்ள அவரது வாடகை வீட்டிற்கு சென்றுள்ளார்.

Vellore vigilance raid

பின்தொடர்ந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலிசார் அதிரடியாக அவரது பன்னீர்செல்வத்தின் காரில் சோதனை செய்துள்ளனர். அதில் ரூ.2.50 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் வீட்டினுள் நுழைந்த போலிசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கவே இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து அலுவலம் போல் நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் வீட்டினுள் நடத்திய சோதனையில் ரூ.31.23 லட்சம் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

அதன்பிறகு பாரதி நகரில் உள்ள பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான வீட்டில் மதியம் முதல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கு கணக்கில் வராத ரூ.2.30 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் 3.6 கிலோ தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளி, நில ஆவண பத்திரங்கள், கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவர் மீது துறைரீதியான விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு சோதனை நடைபெற்று வருகிறது. 


Share this:

Related posts

இன்று முதல் லாக்டவுன்… ஊரடங்கை மதிக்கிறார்களா ஜலகைவாசிகள்??

AMARA

இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டி… ரத்த வெள்ளத்தில் துடித்தவர் மருத்துவமனையில் அனுமதி….!!

NEWSKADAI

மாமா… டவுசர் கழறாம பாத்துக்கோ…. மப்ப விட மானம் முக்கியம் தெரிஞ்சுக்கோ…

MANIMARAN M

எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீப்பந்தம் ஏந்திய மக்கள்… தீவிரமடையும் போராட்ட ‘தீ’!!

POONKUZHALI

தமிழகம் முழுவதும் இன்று ஓடத் துவங்கிய பஸ் மற்றும் ரயில்கள் : மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்..!!!

MANIMARAN M

“சதுரங்க வேட்டை” பட பாணியில் நடந்த மோசடி… ரூ.60 கோடி அம்பேல்…!!

MANIMARAN M