Newskadai.com
தமிழ்நாடு

கிரெடிட் கார்டு மூலம் ரூ.10 லட்சத்தை ஆட்டைய போட்ட இன்ஜினியர்… கைது செய்ய உதவிய ஹெல்மெட்..!!!

Share this:

சென்னையில் மருத்துவமனை ஊழியரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்தை என்ஜியரை ஹெல்மேட்டை வைத்து போலீசார் கைது செய்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை அடுத்த முகலிவாக்கத்தை சேர்ந்த இருதயராஜ் வயது 55. இவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவனையில் வேலை செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இருதாயராஜீக்கு வங்கியில் இருந்து  பழைய கிரெடிட் கார்டை பிளாக் செய்து விட்டு, அப்டேட் ஆன புதிய கார்டு கொடுப்பதாக அழைப்பு வந்துள்ளது. கார்டு பற்றிய விபரங்களை கேட்க அவரும் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் அவரது கிரெடிட் கார்டில் இருந்து ஒரே நேரத்தில் அடுத்தடுத்த 5 லட்சம், 30 ஆயிரம் என மொத்தம் 10 லட்சத்து 30 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது.

Online Fraud

 இந்த நிலையில் 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்தது நீங்கள்தானா? என வங்கி ஊழியர்கள் கேட்டுள்ளனர். தனக்கு புதிதாக கிரெடிட் கார்டு எதுவும் வரவில்லை என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் கோயம்பேட்டை சேர்ந்த 28 வயதான மென் பொறியாளர் கார்த்திகேயன் என்பவர் இருதயராஜ்க்கு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி கிரெடிட் கார்டின் தகவலை அறிந்து கொண்டு கார்டை பிளாக் செய்து , வாடிக்கையாளர் போல் வங்கியில் கூறி புதிய கிரெடிட் கார்டை வாங்கியுள்ளார்.

Online Fraudஇவர் ஏற்கனவே தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு சம்பந்தமாக வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிந்துள்ளதால்,  அதிக அளவில் தொகை வைத்திருப்பவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் பணங்களை திருடியுள்ளார். அவர் வங்கிக்கு செல்லும் போது   ஹெல்மெட்டுடனே சென்றுள்ளார். அந்த ஹெல்மட்டும் அவரது இருசக்கர வாகனத்தின் எண்ணையும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதால் கார்த்திகேயனை எளிதில் பிடிக்க முடிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Share this:

Related posts

முன்னாள் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… கருணாஸ் மீது பரபரப்பு புகார்…!!

THAVAMANI NATARAJAN

சேலம் கடைக்காரர்களே உஷார்: முன்னெச்சரிக்கை இல்லை என்றால் நடவடிக்கை பாயும்… எச்சரிக்கும் மாநகராட்சி…!

MANIMARAN M

நாளை முதல் ரேசன் கடைகளில் இதுவும் இலவசம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!

NEWSKADAI

பள்ளியில் பசுமை புரட்சி… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து…!!

NEWSKADAI

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்… அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

MANIMARAN M

பிரதமர் மோடி ஆஹா…ஓஹோ.. என பாராட்டிய மதுரை சலூன்கடைக்காரர்… கந்துவட்டி புகாரில் தலைமறைவு…!!

MANIMARAN M