Newskadai.com
தமிழ்நாடு

ஊத்தங்கரையில் சந்தேக மரணம்… தனியார் பால் நிறுவன வளாகத்தில் ஊழியர் சடலமாக மீட்பு… அதிர்ச்சி வீடியோ…!!

Share this:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள TK கெங்கபரம்பட்டு பகுதியில் தனியார் பால் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த மாது என்ற 24 வயது இளைஞர் நேற்று காலை 7 மணி அளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாது கம்பெனி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து மாதுவின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் அங்கு குவிந்தனர். மாது தற்கொலை செய்து கொள்ள எவ்வித காரணமும் இல்லை என்றும், அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

தான் பணி செய்யும் நிறுவனத்தின் வளாகத்திலேயே இளைஞர் சந்தேகத்திற்குரிய வகையில் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு வீடியோ…


Share this:

Related posts

ஜலகையில் கொரோனா பீதியில் முதியவர் உயிரிழப்பு… அதிர்ச்சியில் மக்கள்…!!

NEWSKADAI

விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள் : வெளிச்சத்திற்கு வந்த 110 கோடி ரூபாய் முறைகேடுகள்…

MANIMARAN M

பாஜகவில் சேர வந்த ரவுடி… போலீசுக்கு பயந்து தப்பியோட்டம்…

MANIMARAN M

கடலில் குளிக்க தடை : வேளாங்கண்ணி கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம்…

MANIMARAN M

“இ பாஸ் தேவையா?”… தமிழக அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் மனித உரிமை ஆணையம்.

MANIMARAN M

வெடிகுண்டு வீச்சில் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி… முதல்வர் அறிவிப்பு…

MANIMARAN M