Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இ.எம்.ஐ. கட்டுபவர்களுக்கு குட் நியூஸ்… வட்டிக்கு வட்டி கட்டும் பிரச்சனையில் இருந்து விடுதலை…!

Share this:

கொரோனா தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது. பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டதால் லாக்டவு காலத்தில் வங்கிகளுக்கான இ.எம்.ஐ. தொகையை செலுத்த தேவையில்லை என ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கியது. ஆனால் நிலுவையில் ஒத்திவைக்கப்பட்ட மாதாந்திர கடனுக்கான வட்டி வசூலிக்கப்பட்டது தொடர்ந்து வந்தது.

இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட மாதாந்திர கடன் தவணைகளுக்கான வட்டிக்கு, வட்டி விதிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட மாதாந்திர கடன் தவணைகளுக்கான வட்டிக்கு வட்டி வசூலிப்பதை தள்ளுபடி செய்ய முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசு‌ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

வட்டிக்கு வட்டி வசூலிப்பதை ரத்து செய்யும் பிரிவுகளில் தனிநபர் கடன், கல்விக்கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன், கிரெடிட் கார்டில் க‌டன் பெற்றது, சிறு, குறு, தொழில் கடன் ஆகியவைகள் அடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல, மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 6 மாதங்களில் சரியாக தவணை செலுத்தியவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என மத்திய அரசு கூறியுள்ளது.

Reserve bank

முன்னதாக, வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தெரிவித்திருந்தன. அப்போது இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டிருந்தது. இதையடுத்து இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ள முன்னாள் தலைமை கணக்கு அதிகாரி ராஜீவ் மெகரிஷி தலைமையில் நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது.

மேலும் படிக்க : http://தனித்திருப்பதை தவிர வேற வழியில்லை… கொரோனா பரவலில் அடுத்த கட்டத்தில் தமிழகம்…!!

அந்தக் குழு வழங்கியுள்ள பரிந்துரைகள ஏற்றுக்கொண்டு மத்திய அரசு தன் முடிவை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


Share this:

Related posts

சேமிக்கிற காசை டபுளாக்க இப்படியெல்லாம் வழியிருக்கா?… இதுவரைக்கும் இதெல்லாம் தெரியாமல் போச்சே…!

NEWSKADAI

அத்திமுகத்தோனுக்கு பிறந்த நாள் விழா… தீராத வினையெல்லாம் தீர்க்கும் விநாயகர்…

THAVAMANI NATARAJAN

உணவே மருந்து : அறுசுவை உணவுக்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..!?

NEWSKADAI

சீனாவை கழட்டிவிட்ட ஐபோன் நிறுவனம்… சென்னையில் படுஜோராக தொடங்கியது தயாரிப்பு…!

NEWSKADAI

இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு எல்லாம் செம்ம தூளுங்க… ராசி பலன் சொல்லுறத கேளுங்க…!!

NEWSKADAI

பேச்சு பேச்சா இருக்கனும்… ஏடாகூடமா எதுவும் முயற்சிக்க வேண்டாம் இந்த ராசிகாரரே..!!

THAVAMANI NATARAJAN