Newskadai.com
தமிழ்நாடு

ஆசை வைத்து மோசம் போன ‘காட்டு’ யானை… கோபத்தில் வேனை உருட்டித் தள்ளிய அட்டகாசம்…!

Elephant
Share this:

வனப்பகுதியில் உள்ள யானைகளின் அட்டகாசங்கள் நாளுக்கு  நாள் அதிகரித்து வருகின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கரும்பு பாரம் ஏற்றிவரும் லாரிகள் அதிக அளவில் அவ்வழியே செல்கிறது. லாரி ஓட்டுநர்கள், யானைக்காக சில கரும்பு கட்டுகளை வீசி எறிவதை பழக்கப்படுத்தியுள்ளனர். கரும்புகளை  சுவைத்து பழகியதால் யானைகள் பெரும்பாலும் சாலைகளிலே அதிக அளவில் நடமாடுகின்றன. இதனால் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் கரும்பு பார லாரிகளை வழிமறித்து கரும்புகளை எடுத்து தின்கின்றன.  இந்த நிலையில்  நேற்று முன்தினம் அகிலை காராப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே ஒரு பெட்ரோல் டேங்கர் லாரி வந்துள்ளது.

Elepahantஅதை கரும்பு பாரம் ஏற்றிய லாரி என நினைத்து யானை ஒன்று வழிமறித்துள்ளது. ஆனால் லாரியில் கரும்பு இல்லை என்று தெரிந்ததும் யானை லாரியை விட்டு நகர்ந்தது. அதன் பின்னர் சரக்கு வேன் ஒன்று அந்த வழியாக வந்துள்ளது யானை அந்த வேனை மறித்து கரும்பு உள்ளதா? என தேடி பார்த்துள்ளது அதிலும் கரும்பு இல்லாததால் ஏமாற்றம் அடைந்த யானை வேனை தலையால் முட்டி தள்ளியுள்ளது. இதனால் டிரைவர் பயந்து அலறியடித்து தப்பி ஓடியுள்ளார். இக்காட்சிகளை கண்ட மற்ற வாகன ஓட்டிகள் ரோட்டில் வாகனங்களை நிறுத்திக் கொண்டார்கள். எந்த வாகனத்திலும் கரும்பு இல்லை என தெரிந்ததும் வனப்பகுதிக்கே சென்றுவிட்டது. கரும்பு லாரி டிரைவர்கள் கரும்பு கட்டுகளை ரோட்டில் போட்டு பழக்கப்படுத்தியதால் யானைகள் கரும்பை எதிர்பார்த்து வாகனங்களை வழிமறித்து அட்டகாசம் செய்து வருகிறது. எனவே கரும்புகளை ரோட்டில் போடுவதை தவிர்க்க வேண்டும், சோதனை சாவடி போலீசார் இதை கண்காணிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share this:

Related posts

மீண்டும் ஒரு காங்கிரஸ் எம்.பி.க்கு கொரோனா தொற்று… அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

THAVAMANI NATARAJAN

அடுத்த மாதம் சென்னையில் கொரோனா அதிகரிக்கும்… அதிர்ச்சித் தகவல்..!!

MANIMARAN M

நாளை முதல் ரேசன் கடைகளில் இதுவும் இலவசம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!

NEWSKADAI

கொரோனா தொற்று இல்லை… நலமுடன் இருக்கிறார் நல்லகண்ணு…

MANIMARAN M

நகைப்பட்டறை தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி… மனம் குளிரவைத்த கோவை மாநகராட்சி…!

NEWSKADAI

டோல் கேட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட அரசு பஸ்… பயணிகளே சுங்கவரி கட்டிய அவலம்…!!

THAVAMANI NATARAJAN