Newskadai.com
தமிழ்நாடு

மாதந்தோறும் மின்கட்டண அளவீடு… முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு… அமைச்சர் தங்கமணி…!!

Share this:

மத்திய மாநில அரசுகள் கோவிட்-19 கொரோனா தொற்றினால் தற்பொழுது வரை ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன . சில பல தளர்வுகளுடன் இந்த பொது முடக்கத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. வாழ்வாதாரமும், வருவாய் இழப்பும் சாமானியர்களை பெரிதும் பாதித்தது. இந்நிலையில் வீடுகளில் மின் கட்டணமும் அதிகரித்து வந்தது. இதனால் மேலும் பாதிக்கப்பட்டனர்.

அதிகரித்துள்ள மின் கட்டணம் குறித்து தமிழகத்தில் எதிர் கட்சித் தலைவர்கள் உட்பல பலரும் மின் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டங்களும் நடத்தினர். அரசு மின் கட்டண நடைமுறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, கணக்கிடும் முறையில் சில மாற்றங்களையும் அமல்படுத்தியது.

மேலும் படிக்க:http://பாகம் 1: வேதங்கள் அறிவோம்… நான்கு வேதங்கள் குறித்து முக்கிய தகவல்கள்…!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று மீண்டு வந்த அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசிய போது, “தமிழகத்தில் பல ஆண்டுகளாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது, ஊரடங்கு காலத்தில் பெரும்பாலும் மக்கள் அதிகமாக வீட்டில் இருக்கக்கூடிய சூழ்நிலைதான்.

பல பணியாளர்கள் தங்களுது வீடுகளிலிருந்தே பணி செய்தும் வருகின்றனர். இதன் காரணமாக வீடுகளில் மின் பயன்பாடு அதிகரித்து மின் கட்டணமும் அதிகரித்திருக்கிறது. மாதந்தோறும் மின் கட்டணம் அளவீடு செய்ய வேண்டும் என்ற தமிழக மக்களின் வெகு நாளைய கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆலோசனை செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தல்…!!

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்தா..? அரசின் முடிவு என்ன..?

MANIMARAN M

“இனி மணல் கடத்தல் வழக்கில் சிக்கினால்”… அதிரடி உத்தரவை பிறப்பித்து அதிரவைத்த உயர் நீதிமன்றம்…!!

THAVAMANI NATARAJAN

சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி… ஆட்சியர் சீதாலட்சுமிக்கு உறுதியானது கொரோனா தொற்று….!!

NEWSKADAI

மத மோதலை தூண்டிய பாஜக… எஸ்.பி. வருண்குமார் மாற்றத்திற்கு எதிராக குவியும் கண்டனங்கள்…!!

NEWSKADAI

“இ பாஸ் தேவையா?”… தமிழக அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் மனித உரிமை ஆணையம்.

MANIMARAN M