Newskadai.com
அரசியல்

“தமிழகம் முழுவதும் 500 துணை மின் நிலையங்கள்”… பேரவையில் அமைச்சர் தங்கமணி தகவல்…!!

Share this:

நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் இராசேந்திரன் கடலூரி முந்திரி சாகுபடி நடைபெறும் பகுதிகளில் தொழிற்சாலைகளுக்கு சீரான மின்சாரம் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா எனவும், நெய்வேலி தொகுதி, மாளிகம்பட்டு ஊராட்சியில், மாளிகம்பட்டு குடியிருப்பு பகுதி தெருவிற்கு தனியாக மின்மாற்றி அமைத்து தருவதற்கு அரசு ஆவணம் செய்யுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட பகுதியில் சுமார் 241 வீடுகள் உட்பட 358 கட்டிடங்கள் உள்ளது. ஏற்கனவே அங்கு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க நெய்வேலி அனல்மின் நிலையத்திற்கு உட்பட்ட இடத்தில் நிலம் கேட்கப்பட்டபோது, இடமில்லை என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆகவே அருகில் மாற்று இடம் கிடைத்தால் அங்கு துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடந்த நான்காண்டு ஆட்சியில் தமிழகத்தில் 500 துணை மின் நிலையங்கள் அமைக்கபட்டு, அரசின் தீவிர முயற்சியால் மாநிலம் முழுவதும் சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே உறுப்பினர் கூறிய பகுதிக்கும் கண்டிப்பாக சீரான மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.


Share this:

Related posts

நீட் தேர்வு விவகாரம்: பேரவையில் முதல்வர் – ஸ்டாலின் இடையே காரசார விவாதம்…!

AMARA

சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகும் தேதி இதுதான்… வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்…!!

AMARA

நீங்க ஊரடங்கை நீட்டிச்ச வரைக்கும் போதும்…. உடனே எல்லாத்தையும் ஓபன் பண்ணுங்க… கொந்தளித்த வைகோ…!!

MANIMARAN M

கொரோனாவுக்கு பலியானார் காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார்… சோகத்தில் மூழ்கியது காங்கிரஸ்…!!

NEWSKADAI

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்…!!!

MANIMARAN M

எஸ்.வி.சேகரின் ஆசையை விரைவில் அதிமுக அரசு நிறைவேற்றும்

THAVAMANI NATARAJAN