Newskadai.com
தமிழ்நாடு

ஆசிரியர் தகுதி தேர்வில் திடீர் திருப்பம் .. அன்புமணிக்கு அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி பதில்..!!

Share this:

தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அது 7 வருடங்களுக்கு செல்லுபடியாகும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 7 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தகுதி சான்றிதழ் செல்லுபடியாகது என்று தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கீழ்கண்டவாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழுக்கான காலநிலை  முடியவுள்ளது. இதற்கிடையில் கடந்த 6 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனங்களையே நடத்தப்படாமல் இருந்தது தேர்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு  மிகுந்த ஏற்றமாற்றத்தை அளிக்கிறது.

இதனை தொடர்ந்து ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றவர்களின் தகுதிச்சான்றிதழ்கள் காலாவதியாக உள்ள நிலையில்  அவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் மீண்டும் அவர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டும். ஆனால் தகுதித் தேர்வு மீண்டும் எப்பொழுது நடத்தப்படும் என்பது தெரியாத நிலையில் உள்ளது. இதனால் காலாவதியாகுவதற்கு முன்பே ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட்டு விட்டால், அவர்கள் தேர்ச்சி  பெற்றதற்கு அர்த்தமாகிவிடும்.

எனவே தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் நிரந்தரமாக செல்லுபடியாகும் என்று  தமிழக அரசு அறிவிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறுகையில்;

ஆசிரியர் தகுதிர் தேர்வில் தேர்ச்சி அடைந்து 7 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படமாட்டாது. அவர்கள்  மீண்டும் தகுதி தேர்வை எழுத வேண்டும் அதில் அவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதனால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.


Share this:

Related posts

2021 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்… அதிரடி அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

நடிகையிடம் சில்மிஷம் – முன்னாள் அமைச்சர் மீது 5 பிரிவில் வழக்குப்பதிவு

AFRIN

நாகை எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி… அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

POONKUZHALI

குடும்பம் குடும்பமாக உயிரிழந்த தமிழர்கள்… மூணாறு நிலச்சரிவில் அதிகரிக்கும் மரணங்கள்…

MANIMARAN M

நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது… தமிழக அரசின் உத்தரவால் பஸ் உரிமையாளர் அதிருப்தி…!

AMARA

கோவை, நீலகிரி மக்களே உஷார்… மீனவர்களே நீங்களும் ஜாக்கிரதையா இருங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

AMARA