Newskadai.com
அரசியல்

#BREAKING முதல்வர் வேட்பாளராக எடப்பாடியே தொடர்வார்…. ஓ.பி.எஸ். வாயிலிருந்து வந்த பொன்னான அறிவிப்பு….!!

Share this:

வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது கூட ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தொண்டர்கள் இடையே முதல்வர் வேட்பாளர் குறித்து முழக்கங்கள் எழுப்பபட்டன. பொதுக்குழு கூட்டத்தில் நான் அம்மாவால் அறிமுகப்படுத்தப்பட்டேன், நீங்கள் சசிகலாவால் முதலமைச்சரானீர்கள் என ஓ.பி.எஸ். கடுப்புடன் இ.பி.எஸ்-யிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து அக்டோபர் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பார்கள் என மதுசூதனன் அறிவித்திருந்தார். இன்று கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாகவே இரு தரப்பினரும் தத்தமது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அதிமுக சார்பில் முதல்வருக்கான வெற்றி வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஒருமனதாக முன்னிருத்துவதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சி பூசல் ஒரு வழியாக நிறைவுபெற்றது. இதற்கு முன்னதாக அதிகாலை 3 மணி வரை ஓ.பன்னீர்செல்வத்தை சாமாதானம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிட்டத்தக்கது.


Share this:

Related posts

இவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுங்கள்… சட்டமன்றத்தில் அதிரடி கோரிக்கை வைத்த ஸ்டாலின்…!

AMARA

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?… கருத்துக்கணிப்புகளில் முதலிடம் பிடிக்கும் ஓ.பி.எஸ்….!

AMARA

ரேசன் கடை மண்ணெண்ணெய் விலை அதிரடி உயர்வு… அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு…!

MANIMARAN M

இந்தி தெரியாத மாநிலங்கள் நாட்டை விட்டு வெளிய போங்கன்னு சொல்லிடுவீங்களா?… பொங்கியெழுந்த சீமான்…!!

MANIMARAN M

முழு அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. இறுதிப்பயணம்… அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை…!!

MANIMARAN M

ஊரடங்கு நீட்டிப்பா?… மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை…!

AMARA