Newskadai.com
தமிழ்நாடு

தாரமங்கலத்தில் வரும் 28, 29-ல் முழு கடையடைப்பு… கொரோனாவால் வணிகர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

Tharamangalam
Share this:

தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று தீவிரமடைந்து வந்தது. ஆனால் தற்போது சென்னையை அடுத்துள்ள தென் மாவட்டங்களை கொரோனா குறிவைத்து தாக்கி வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சேலத்தில் இன்றைய நிலவரப்படி, ஒரே நாளில் 451 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து பலியானோரின் மொத்த எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 222 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 5 ஆக அதிகரித்துள்ளது.

Tharamangalam

மேலும் படிக்க : http://அடுத்த ரவுண்டுக்கு தயாரான கொரோனா… தொற்றால் முடங்கும் ஜலகை சுற்றுவட்டாரம்…!!

நகரப் பகுதிகளை மட்டுமல்லாது சேலத்தின் கிராமப்புறங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக மேட்டூர் அருகேயுள்ள ஜலகண்டாபுரம், செலவடை ஆகிய பகுதிகளில் கொரோனா தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதேபோல் தாரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்களின் நலன் கருதி அங்குள்ள வணிகர்கள் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.

அதன்படி, தாரமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள மளிகை கடைகள், ஜவுளி கடைகள், நகை கடைகள், பெட்டிக் கடைகள் உட்பட அனைத்து வகையான கடைகளும் வரும் 28 (வெள்ளி) மற்றும் 29 (சனி) ஆகிய தேதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பால், மருந்தகங்கள் திறந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளதால் அன்றுடன் சேர்த்து 3 நாட்களுக்கு கடையடைப்பை நடத்த தாரமங்கலம் சுற்றுவட்டார அனைத்து வியாபாரிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதனால் இந்த வாரத்தில் நாளை ஒருநாள் மட்டுமே தாரமங்கலத்தில் கடைகள் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tharamangalam


Share this:

Related posts

கோவையில் கொரோனா பீதி… நகைக்கடை உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

MANIMARAN M

மதுரையில இதெல்லாம் சாதாரணம்ப்பு… இது மூணாவதப்பு…

THAVAMANI NATARAJAN

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்காக ஒன்றிணைந்த போலீசார்… சம்பளத்தில் இருந்து ரூ.86 லட்சம் நிதியுதவி…!

THAVAMANI NATARAJAN

5 மாதத்திற்கு பிறகு பேருந்து பயணம்… பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய  பேருந்து சேவை…!!

THAVAMANI NATARAJAN

முனீஸ்வரருக்கு தானமாக இடமளித்த அப்துல் காதர்…..

MANIMARAN M

“தலைமையேற்க வா”… மதுரையை தாண்டி கோவை வரை வீசும் அழகிரி அலை… பீதியில் திமுக…!!

MANIMARAN M