Newskadai.com
லைஃப் ஸ்டைல்

கண் அடிச்சா காதல் வருதோ இல்லையோ… இந்த நோய் வரவே வராதுங்க..!!

Share this:

“அரிது அரிது மானிடராதல் அரிது..
மானிடராயினும் கூன் குருடு
செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது..”
என்று நமது பாட்டி ஔவை கூறியுள்ளார்.

இன்றைய வேகமான உலக சூழலில், நாம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறோமா? நமது உடல் உறுப்புகளை சரியான முறையில் பராமரிக்கின்றோமா? என்று நமக்கு நாமே கேள்வி எழுப்பினால், பெரும்பாலும் இல்லை என்ற பதிலே வெளிப்படுகின்றது. நம்முடைய உறுப்புகளிலியே மிக முக்கியமான உறுப்பு கண்கள். கண்களை மூடிக் கொண்டு ஒரு நாள் வாழ்ந்து பார்த்தால் நம்மால் கண்களின் அவசியத்தை புரிந்துக் கொள்ள முடியும்.

ஒரு மணி நேரம் கண்களை மூடிக் கொண்டு நம்முடைய அன்றாட பணிகளில் சிலவற்றை கூட சரி வர செய்ய முடியாது. அப்படியிருக்க நாம் எவ்வாறு நம் கண்களை பாதுகாக்கின்றோம். நவீன மயமான இக்காலத்தில் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், செல்போன் போன்றவைகளை அதிகமாக பயன்படுத்துவது அவசியத் தேவையாகி போனது, அதுவே சில நேரங்களில் நம் கண்கள் பாதிப்படைய காரணமாகவும் அமைகின்றன.

இன்றைய சூழலில் உலகையே அச்சுறுத்தும் நோயாக உலர் கண் நோய் பெருகி வருகிறது. மருத்துவ துறையில் இதனை Dry Eye Syndrome என்று அழைக்கின்றனர். அதிகப்படியான வெளிச்சம், தூசு மற்றும் காற்று இவைகளினால் இந்த நோய் உருவெடுக்கின்றது. நம் கண்களை பாதுகாக்கும் இமை, கண்களை வறட்சியடையாமலும் பாதுகாக்கின்றது. கண் சிமிட்டுவது குறையும் பொழுது கண்களில் ஈரப்பதம் குறைந்து உலர் கண் நோய் ஏற்படுகிறது.

பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 14 முறை இமைக்கின்றோம். ஆனால் நம் மன உணர்வுகளை பொறுத்து இதிலும் சில வேறுபாடுகள் ஏற்படத்தான் செய்கின்றன. மன அழுத்தம் உடையவர் மற்றும் கணினி முன் அமர்ந்து வேலை செய்வோர் இமைப்பது சராசரியை விட குறைகிறது. இதுவே பல கண் நோய்களுக்கு காரணமாக அமைகிறது.இன்றைய இளைஞர்கள் செல்ஃபோன், லேப்டாப், தொலைகாட்சி போன்றவற்றை பல மணி நேரம் தொடர்ந்து பார்க்கின்றனர். இதனால் கண் சிமிட்டுவது குறைகிறது.

கண் சிமிட்டுவது குறைந்தால் கண்களில் ஈரப்பதம் குறைந்து உலர் கண் நோய் ஏற்படுகிறது. கண்களில் நோயால் பாதிக்கப்படும் 100-ல் 80 நபருக்கு உலர் கண் நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 21 முதல் 40 வயதுக்குள் இருப்போர் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆய்வு கூறுகிறது. உலக அளவில் 2030-ம் ஆண்டில் 275 மில்லியன் மக்கள் உலர்கண் நோயால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் 5 முதல் 15% பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

உலர்கண் நோய்க்கான காரணங்கள் :

 • கணினி, மடிக்கணினி, செல்போன், டிவி போன்றவற்றை வெகு நேரமாக பார்ப்பது.
 • முறையாக கண்களை சிமிட்டாமல் இருப்பது.
 • நீண்ட நேரம் காண்டாக்ட் லென்ஸ் அணிவது.
 • காற்றில் பறக்கும் தூசு மண் போன்றவைகளாலும் ஏற்பட வாய்ப்பு.

உலர்கண் நோய்க்கான அறிகுறிகள் :

 • கண்களில் உறுத்தல், அரிப்பு, எரிச்சல் ஏற்படுவது.
 • கண்களிலிருந்து அளவுக்கதிகமான நீர் வடிதல்.
 • மங்கலான பார்வை போன்றவை உலர்கண் நோய்க்கான அறிகுறிகளாகும்.

கண் உலர் நோயிலிருந்து கண்களை எப்படி பாதுகாப்பது?

 • கணினி, செல்போன், டிவி போன்றவற்றை அதிக நேரம் பார்க்க கூடாது.
 • ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் கண்களை மூடி ஒய்வு எடுக்க வேண்டும்.
 • அடிக்கடி கண்களை சிமிட்ட வேண்டும்.
 • ஒமேகா-3 அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

மேலும் கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக கண் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும், இதனால் உலர் கண் நோய் மட்டுமல்லாது வேறு எந்த கண் நோயையும் உண்டாக்காது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


Share this:

Related posts

ஆன்லைனில் ஆடு விற்பனை… பிரியாணியை விட சூடாக நடக்கும் வியாபாரம்…!

NEWSKADAI

சூப்பர் டாடிக்கு கைக் கொடுக்கும் ஆனந்த் மஹிந்திரா…

MANIMARAN M

ஏழைகளின் இதயத்தை துடிக்க வைத்த இதயம் அடங்கியது… மெர்சல் டாக்டர்

NEWSKADAI

கழுத்து வலி, முதுகு வலி தாங்க முடியலையா?… உடனடி தீர்வுக்கு இந்த சூப் செய்து சாப்பிட்டு பாருங்க…!

NEWSKADAI

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

MANIMARAN M

கொரோனாவை தடுக்க இந்த 6 பொருட்கள் போதும்… சூப்பரான நோய் எதிர்ப்பு சக்தி பானம் இதோ…!!

THAVAMANI NATARAJAN