Newskadai.com
லைஃப் ஸ்டைல்

குடி வெறி: தம்புல்ஸை மனைவி தலைமேல் போட்ட குடிகார கணவன்…!!

Share this:

ஆந்திர மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தில் (ஏபிஎஸ்ஆர்டிசி) ஓட்டுனராக பணிபுரிபவர் டங்கேட்டி ஸ்ரீனு. இவர் குடும்பத்துடன் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோவ்வுரு கிராமத்தில் வசித்து வருகிறார். குடிக்கு அடிமையான இவர் மனைவி மாதவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து அவரது மகள் கூறுகையில், “தினமும் என் அப்பா குடித்துவிட்டு வந்து அம்மாவிடம் தகராறு செய்வார். கெட்டவார்த்தைகளால் திட்டி அம்மாவை அடித்து கொடுமைப்படுத்துவார். இது போன்ற கொடுமைகளை தாங்க முடியாமல் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளோம்.

கடந்த புதன்கிழமையும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். ஏன் குடிக்கிறீர்கள் என தட்டிகேட்ட என் அம்மாவின் தலையில் டம்பெல்ஸால் ஓங்கி அடித்துவிட்டார். இதில் அம்மா படுகாயம் அடைந்தார். உடன் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அன்றிரவே இது குறித்து இந்திரபாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் என்று கூறினார். இந்திரபாலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நாகர்ஜுன ராஜு கூறுகையில், கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் வன்முறையில் ஈடுபட்டதாக எஃபஐஆர் பதிவு செய்து டிரைவர் ஸ்ரீனுவை தேடி வந்தோம். பணிக்கு சென்றவர் நேற்றுவரை வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று இரவு அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம் என்று கூறினார்.


Share this:

Related posts

மனைவியிடம் கம்முனு இருங்க… சந்தேகம் வேண்டாம்… செல்வாக்கு பெருகும்..!! இந்த ராசிகாரர்களுக்கு…

NEWSKADAI

சீனாவை கழட்டிவிட்ட ஐபோன் நிறுவனம்… சென்னையில் படுஜோராக தொடங்கியது தயாரிப்பு…!

NEWSKADAI

செல்வம் பெருகும் அற்புதமான நாள்… எதிர்பாராத மாற்றங்கள், எதிரிகளிடம் கவனம் தேவை… இந்த ராசிகாரர்களே!!…

NEWSKADAI

தனியொருவராக விவசாயி நிகழ்த்திய சாதனை.!! 3 கிலோ மீட்டருக்கு நீர் வழிப்பாதை அமைத்து அசத்தல்…!!

MANIMARAN M

இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு எல்லாம் செம்ம தூளுங்க… ராசி பலன் சொல்லுறத கேளுங்க…!!

NEWSKADAI

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

MANIMARAN M