Newskadai.com
விளையாட்டு

பேட்டிங்கில் சொதப்பிய மும்பை…!!! ப்ளே ஆஃப்க்குள் நுழைந்தது ஹைதராபாத்…!!!

dream11 ipl srh vs mi
Share this:

Dream11 ipl 2020 தொடரின் 54வது இறுதி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் களம் கண்டன. டாஸ் வென்ற ஹைதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய அழைக்கப்பட்டது மும்பை இந்தியன்ஸ் அணி.

dream11 ipl srh vs mi

கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாத அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்த போட்டியில் இடம் பெற்றார். ஆனாலும் ரோஹித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த டி காக் 25, சூர்யகுமார் யாதவ் 36, இஷான் கிஷன் 33 ரன்கள் எடுத்துக் கொடுத்தனர்.

dream11 ipl srh vs mi

அடுத்து வந்த க்ருனால் பாண்டியா டக் அவுட் ஆனார். ஹைதராபாத் அணி மிக சிறப்பாக பந்து வீசி ரன்கள் கொடுக்காமல் மும்பை அணியை திணறடித்தது. அடுத்து வந்த சௌரப் திவாரியும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த விக்கெட் இழப்பினால் திணறிய மும்பை அணிக்கு பொல்லார்டு உயிர் கொடுத்தார்.

dream11 ipl srh vs mi

அதிரடி ஆடிய பொல்லார்டு 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 150 இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய வந்தது.

dream11 ipl srh vs mi

துவக்க வீரர்களாக அணியின் கேப்டன் டேவிட் வார்னரும் விரிதிமான் சாஹாவும் களமிறங்கினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு போக முடியும் என்ற நிலையில் இருவரும் அதிரடி ஆட்டமாடினர்.

dream11 ipl srh vs mi

வார்னர் 58 பந்துகளில் 85 ரன்களும், சாஹா 45 பந்துகளில் 58 ரன்களையும் குவித்து மிரள வைத்தனர். 17.1 ஒவரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

dream11 ipl srh vs mi

மேலும் படிக்க : நவ.10 முதல் தியேட்டர்கள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு…!

ஹைதராபாத் அணியின் இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணியின் ப்ளே ஆஃப் கனவு பறிக்கப்பட்டது. ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுடன், ஹைதராபாத் அணியும் பங்கேற்க உள்ளது.


Share this:

Related posts

ப்ளே ஆப் போகுமா சென்னை அணி? எதிர்பார்த்த ரசிகர்கள்- ஏமாற்றிய தோனி…

MANIMARAN M

தோல்வியிலும் வரலாற்று சாதனை செய்த சிஎஸ்கே..!!

NEWSKADAI

#IPL : சிஎஸ்கேவின் மோசமான பேட்டிங்… வெற்றியை தட்டிப் பறித்த ராஜஸ்தான்…

MANIMARAN M

ஐபிஎல் வரலாற்றில் சாதனை: நெருக்கடி கொடுத்த பஞ்சாப், சிக்சர் மழை பொழிந்த ராஜஸ்தான்

NEWSKADAI

ராஜஸ்தான் அணியின் பிளே ஆப் கனவை கேள்விக்குறியாக்கிய ஹைதராபாத் அணி…

MANIMARAN M

“ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்ரா”… 54 வயதில் அதிரடியாக கம்பேக் கொடுக்க போகும் மைக் டைசன்…!

NEWSKADAI