Newskadai.com
விளையாட்டு

பரிதாபமாக வெளியேறிய பெங்களூரு…!! தகுதி சுற்றுக்கு முன்னேறிய ஹைதராபாத்..!!!

dream11 ipl eliminator
Share this:

Dream11 ipl 2020 ஐபிஎல் தொடரில் லீக் போட்டியில் முதல் நான்கு இடம் பிடித்த அணிகள் பிளே-ஆஃப் சுற்றில் மோதி வருகின்றன. முதல் தகுதி சுற்றில் வெற்றிப் பெற்று மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

dream11 ipl eliminator

தோல்வியடைந்த டெல்லி அணி இரண்டாம் தகுதி சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்று வரும் அணியுடன் மோதி இறுதி போட்டிக்கு செல்லும். எலிமினேட்டர் போட்டியில் சன் ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

dream11 ipl eliminator

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஹைதரபாத். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரை விட்டே வெளியேற வேண்டும் என்ற நிலையில் இரு அணிகளும் திட்டமிட்டு களமிறங்கின. துவக்க வீரர்களா விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர்.

dream11 ipl eliminator

விராட் கோலி 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து தேவ்தத் படிக்கல் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த ஏபி டிவில்லியர்ஸ் நிதானமா ஆட்டத்தை துவக்கினார். ஆரோன் பின்ச் 32 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.

dream11 ipl eliminator

நிதான ஆட்டம் ஆடி ரன்கள் குவித்து வந்த டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை துவக்கினார். 18வது ஓவர் வீசிய நடராஜனின் 2வது பந்தில் வாஷிங்டன் சுந்தரை ஆட்டமிழந்தார். அதே ஓவரில் 5வது பந்து மிடில் ஸ்டம்ப்பை பதம் பார்த்து டிவில்லியர்ஸ் விக்கெட்டை கைப்பற்றியது.

dream11 ipl eliminator

டிவில்லியர்ஸ் 43 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கொடுத்தார். 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு அணி. 132 என்ற இலக்குடன் களமிறங்கியது ஹைதராபாத் அணி. கேப்டன் டேவிட் வார்னரும் கோஸ்வாமியும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

dream11 ipl eliminator

கோஸ்வாமி டக் அவுட் ஆனார். டேவிட் வார்னர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். மனிஷ் பாண்டே 24 ரன்களும், ப்ரியம் கார்க் 7 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஹைதராபாத் அணி கடுமையாக திணறியது. அடுத்து வந்த வில்லியம்சன் அணியை கரைச் சேர்க்க போராடினார்.

dream11 ipl eliminator

ஹோல்டரும் வில்லியம்சனும் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடி அணியை வெற்றி இலக்கின் பக்கம் கொண்டு வந்தனர். 20 ஓவர், 6 பந்துகளி 9 ரன்களில் வெற்றி என்ற நிலையில் ஹோல்டர் இரண்டு ஃபோர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

dream11 ipl eliminator

மேலும் படிக்க : டெல்லியை கதறவிட்ட மும்பை…!! சின்னாபின்னமான கேபிடள்ஸ்…!!!

19.4 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இரண்டாம் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது ஹைதராபாத் அணி. இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியினால் பெங்களூரு அணி தொடரிலிருந்து வெளியேறியது.


Share this:

Related posts

சன்ரைஸ் அணியை துவம்சம் செய்த ராயல் சேலஞ்சர்ஸ்..!!!

MANIMARAN M

IPL : கொட்டாவி விட்ட ராஜஸ்தான் சிங்கங்கள் கட்டிப்போட்ட கொல்கத்தா வீரர்கள்

MANIMARAN M

“தோனி வேற லெவல் பிளேயர்” தோணியை புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்

MANIMARAN M

“தோனியிடம் சரியான கேப்டன் சிப் இல்லை” – முன்னாள் கிரிக்கெட் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு..!!!

MANIMARAN M

அடித்து ஆடியும் பரிதாபமான தோல்வி… விரட்டிப் பிடித்து வெற்றிக் கனியை பறித்த டெல்லி…

MANIMARAN M

#IPL : ஹைதராபாத்தின் ஆக்ரோஷத்தில் அடங்கிப்போன பஞ்சாப் அணி…!!

MANIMARAN M