Dream11 ஐபிஎல் 2020 தொடரில் 34 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் ஷார்ஜாவில் மோதியது. டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக சாம் கர்ரன் டுபிளெசிஸ் களமிறங்கினர்.
முதல் ஓவரிலேயே ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளினார் சாம் கர்ரன். அடுத்து வந்த ஷேன் வாட்சன் டுபிளெசிஸுடன் இணைந்து நிதானமாக ஆடினார். பாப் டுபிளெசிஸ் சிறப்பான ஆட்டத்தைக் கொண்டு அரை சதம் தாண்டினார். 47 பந்துகளில் 58 ரன்கள் எடுத்துக் கொடுத்தார் டுபிளெசிஸ்.
அடுத்து வந்த அம்பதி ராயுடு துவக்கத்திலேயே அதிரடி காட்டினார். ஷேன் வாட்சன் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். 5வது ஆட்டக்காரராக கேப்டன் தோனி களமிறங்கினார். சிஎஸ்கேவின் மொத்த ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளும் தவிடு பொடியானது போல 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களத்து வந்த ஜடேஜா நம்பிக்கைக் கொடுத்தார். ராயுடுவுடன் இணை சேர்ந்து அதிரடி ஆட்டம் ஆடினார். கடைசி 4 ஓவர்களில் இணை சேர்ந்த ராயுடு ஜடேஜா சிக்ஸர்களாக பறக்க விட்டனர். ஜடேஜா 4 சிக்ஸ்கள், ராயுடு 4 சிக்ஸ்கள் என அடித்து தள்ளினர்.
17 வது ஓவரில் 12 ரன்கள் 18வது ஓவரில் 13 ரன்கள், 19வது ஓவரில் 16 ரன்கள், 20 ஓவரிலும் 16 ரன்கள் குவித்தனர். 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. சவாலான இலக்குடன் பேட்டிங்கிற்கு வந்தது டெல்லி அணி. துவக்க வீரர்களாக ப்ரித்வி ஷா ஷிகர் தவான் இணை களமிறங்கியது.
இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆனார் ப்ரித்வி ஷா. அடுத்து வந்த ரஹானே 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக ஆடினார். தவான் ஸ்ரேயாஸ் இணை நிதானமாக ஆடினாலும் 23 ரன்களில் ஆட்டமிழந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.
தவானுக்கு டெல்லி அணியை கரை சேர்க்கும் அழுத்தம் ஏற்பட்டது. அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 24 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி தவானுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து ஆடினார். கடைசி 2 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அலெக்ஸ் கேரி 19வது ஓவரின் முதல் பந்தில் அவுட் ஆனார்.
மேலும் படிக்க : இன்று தொட்டதெல்லாம் துலங்கும் நாள்… யாரையும் குறைத்து மதிப்பிடாதிங்க..!!
6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு தள்ளப்பட்டது டெல்லி அணி. கடைசி ஓவரில் அக்சர் பட்டேல் 3 சிக்ஸ்கள் அடித்து டெல்லி அணியை வெற்றி பெற செய்தார். டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.