Newskadai.com
விளையாட்டு

ராஜஸ்தான் அணியின் பிளே ஆப் கனவை கேள்விக்குறியாக்கிய ஹைதராபாத் அணி…

dream11 ipl 2020
Share this:

Dream11 IPL 2020 தொடரின் 40 ஆவது லீக் போட்டியில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்  அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணிபந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக உத்தப்பா மற்றும் பென் ஸ்டோக்ஸ் இணை களமிறங்கினர்.

dream11 ipl 2020

உத்தப்பா 19 ரன்களில் ரன் அவுட்டானார். பென் ஸ்டோக்ஸ் மிகப் பொறுமையாக விளையாடி 30 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. சாம்சன் 36 ரன்கள், பாரக் 20 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 19 ரன்கள் எடுத்தனர். ஆர்ச்சர் கடைசி ஓவரில் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்.

dream11 ipl 2020

இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற 155 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சிகரமாக அமைந்தது.

dream11 ipl 2020

ராஜஸ்தான் அணி பந்து வீச்சாளர் ஆர்ச்சர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இவரது மிரட்டலான பந்துவீச்சில் வார்னர், பேர்ஸ்டோவ் அடுத்தடுத்து அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த மணீஷ் பாண்டே, விஜய் சங்கர் இணை ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர்.

dream11 ipl 2020

ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் திட்டங்களை தவிடு பொடியாக்கியனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ராஜஸ்தான் அணி திணறியது. இவர்கள் இருவர் மட்டுமே 135 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

dream11 ipl 2020

மணீஷ் பாண்டே 43 பந்துகளில் 83 ரன்களுடனும், விஜய் சங்கர் 51 பந்துகளில் 52 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் ஹைதராபாத் அணி 18.1 ஓவரில் 156 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

dream11 ipl 2020

மேலும் படிக்க : 15 கோடி ரூபாய் செல்போன்கள் கொள்ளை… கண்டெய்னர் லாரியை வழிமறித்த கைவரிசை…!

இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் ராஜஸ்தான் அணியின் பிளே ஆப் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


Share this:

Related posts

சிஎஸ்கே ஒரு மிகப்பெரிய “ஓட்டை கப்பல்” தல தோனி ஓபன் டாக்…

MANIMARAN M

“Home of Dhoni Fan”- “விசில் போடு”- வெறித்தனமான ரசிகரின் ஒரு சூப்பர் டூப்பர் காணிக்கை…

MANIMARAN M

ஒரு பந்தில் ஒரு ரன்…!!! தெறிக்கவிட்ட சிஎஸ்கே… கனவு கலைந்த கொல்கத்தா…

MANIMARAN M

பஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப் கனவை காலி செய்த சிஎஸ்கே…!!!

MANIMARAN M

பரிதாபமாக வெளியேறிய பெங்களூரு…!! தகுதி சுற்றுக்கு முன்னேறிய ஹைதராபாத்..!!!

MANIMARAN M

20/20 மேட்சில் இன்னிங்ஸ் விளையாடிய சென்னை அணி – தெறிக்க விட்ட விராட் கோலி

MANIMARAN M