Newskadai.com
விளையாட்டு

டெல்லியை கதறவிட்ட மும்பை…!! சின்னாபின்னமான கேபிடள்ஸ்…!!!

dream11 ipl qualifier 1
Share this:

Dream11 ipl 2020 முதல் தகுதிச் சுற்றுப் போட்டி மும்பை அணிக்கும் டெல்லி அணிக்கும் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்து, மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. துவக்க வீரர் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். கீரன் பொல்லார்டும் டக் அவுட் ஆனார்.

dream11 ipl qualifier 1

பின்னர் வந்த இளம் வீரர்கள் அதிரடியாக ஆடினார்கள். இஷான் கிஷன் 55 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். சூர்யகுமார் யாதவ் 51 ரங்களும், டி காக் 40 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா தெறிக்க விட்டார். அவர் அதிரடி ஆட்டம் ஆடி 14 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து மிரள வைத்தார்.

dream11 ipl qualifier 1

20 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்து ஒரு பெரும் இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்தது மும்பை அணி. 200 என்ற பெரும் இலக்கை சேஸிங் செய்ய களமிறங்கியது டெல்லி. துவக்க வீரர்களாக களமிறங்கிய ப்ரித்வி ஷா, அஜின்க்யா ரஹானே ட்ரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார்கள்.

dream11 ipl qualifier 1

அடுத்து வந்த ஷிகர் தவான் பும்ராவின் பந்துக்கு டக் அவுட் ஆனார். முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் ரன்களே எடுக்காமல் வரிசையாக டக் அவுட் ஆனாதால் டெல்லி அணியின் வெற்றி கேள்விக்குறியானது. இப்படி ஒரு மோசமான துவக்கத்தை இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணியும் பெறவில்லை.

dream11 ipl qualifier 1

அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மீது அழுத்தம் ஏற்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி ஆட்டம் ஆடி 46 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அரைசதம் குவித்தார். அவரும் ஆட்டமிழந்த பின் டெல்லி அணி நம்பிக்கை இழந்தது.

dream11 ipl qualifier 1

அடுத்து வந்த அக்சர் பட்டேல் 42 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார். பும்ரா மிரட்டல் பும்ரா இந்தப் போட்டியில் மிரட்டலாக பந்து வீசி இருந்தார். 4 ஓவர்களில் ஒரு டபுள் விக்கெட் மெய்டன் உட்பட 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

dream11 ipl qualifier 1

மேலும் படிக்க : அரசியல் கட்சி தொடங்குகிறாரா விஜய்?… வெளியானது பரபரப்பு உண்மை…!

ட்ரென்ட் போல்ட் 2 ஓவர்களில் 9 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். மும்பை வெற்றி மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.


Share this:

Related posts

பேட்டிங்கில் திணறிய பெங்களூரு…. வச்சு செஞ்சு பழித் தீர்த்த மும்பை…!!!

MANIMARAN M

#IPL : எகிறி அடித்த டில்லி – பதுங்கிப் பாய நினைத்து பயந்து தோற்ற ராஜஸ்தான்…

MANIMARAN M

வெற்றியின் பக்கம் வந்த ராஜஸ்தான்… மிரட்டல் பந்துவீச்சால் தோற்கடித்த டெல்லி…

MANIMARAN M

பெங்களூர் அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னேறிய ஹைதராபாத் அணி

NEWSKADAI

பந்து வீச்சில் அதிரடிக் காட்டி வென்ற பஞ்சாப்…. தொடர் விக்கெட்களை இழந்து தோல்வியை தழுவிய ஹைதராபாத்

MANIMARAN M

“Home of Dhoni Fan”- “விசில் போடு”- வெறித்தனமான ரசிகரின் ஒரு சூப்பர் டூப்பர் காணிக்கை…

MANIMARAN M