Newskadai.com
விளையாட்டு

5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்…!!!

dream11 ipl cup
Share this:

Dream11 ipl 2020 தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்றது. மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாகவும், தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் ஐபிஎல் கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது.

dream11 ipl cup

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. துவக்க வீரராக வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் ட்ரெண்ட் போல்டின் முதல் பந்தில் டக் அவுட் ஆனார். ஆரம்பமே டெல்லி அணிக்கு சறுக்கலாக அமைந்தது.

dream11 ipl cup

அடுத்து வந்த ரஹானே 2 ரன்களிலும், ஷிகர் தவான் 15 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். ஸ்ரேயாஸ் ஐயருடன் அடுத்து இணைச் சேர்ந்த ரிஷப் பண்ட் இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர்.

dream11 ipl cup

பண்ட் 38 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஹெட்மயர் அதிரடி ஆட்டம் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 5 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

dream11 ipl cup

ட்ரென்ட் போல்ட் 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி டெல்லி அணியின் சரிவுக்கு காரணமாக இருந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை களத்தில் நின்று 65 ரன்கள் சேர்த்தார். டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.

dream11 ipl cup

இந்த தொடர் முழுவதும் அதிரடி ஆட்டம் ஆடிய மும்பை அணிக்கு 157 என்பது மிக சுலபமான இலக்கு. பின்னர் சேஸிங்க் செய்ய வந்தது மும்பை அணி. ரோஹித் சர்மாவும் டி காக்கும் துவக்க வீரர்களாக வந்து அதிரடி ஆட்டம் ஆடினர்.

dream11 ipl cup

டி காக் 20 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அடித்து ஆட துவங்கினார். 19 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா விக்கெட்டை காப்பாற்ற தன் விக்கெட்டை தியாகம் செய்து ரன் அவுட் ஆனார்.

dream11 ipl cup

தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷனும் அதிரடி ஆட்டம் ஆடினார். அரைசதம் கடந்த ரோஹித் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த 9 ரங்களிலும் ஹர்திக் பாண்டியா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

dream11 ipl cup

பின்னர் க்ருனால் பாண்டியா களமிறங்கிய இலக்கை எட்டி மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தார். 18.4 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.


Share this:

Related posts

மும்பை இந்தியன்ஸை வெளுத்து வாங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ்…

MANIMARAN M

தோல்வியிலும் வரலாற்று சாதனை செய்த சிஎஸ்கே..!!

NEWSKADAI

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றுமொரு விருந்து…. பெண்கள் T-20 போட்டியை விரைவில் நடத்த முடிவு…!!

MANIMARAN M

பெங்களூர் அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னேறிய ஹைதராபாத் அணி

NEWSKADAI

டெல்லி அணியின் பந்து வீச்சுக்கு பயந்து ஒடுங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்…

MANIMARAN M

சர்வதேச கிரிக்கெட்டில் இவர் தான் நெம்பர் ஒன் கேப்டன்… தல தோனியை பின்னுக்குத் தள்ளிய இயன் மோர்கன்…!!

MANIMARAN M