Newskadai.com
தமிழ்நாடு

கோவையை கலக்கிய டவுசர் கொள்ளையர்கள்… போலீசிடம் தானாக வந்து கொத்தாக சிக்கிய சம்பவம்…!!

Share this:

கோவை சூலூரை அடுத்த பட்டணம்புதூரை சேர்ந்த பிரபு (31) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சூலூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து பிரபு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். பிரபு வீட்டில் கொள்ளை போன நேரத்தில் டவுசர் கொள்ளையர்கள் 3 பேர் அந்த பகுதியில் நடமாடியது தெரியவந்தது.

கடந்த சில மாதங்களாக கோவை காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுசிங்காநல்லூர், முத்துக்கவுண்டன் புதூர், சூலூர், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள்தான் இந்த டவுசர் கொள்ளையர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட காவல்துறை டவுசர் கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்தது.

இதையடுத்து கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டிராஜ், ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று சூலூர் சந்தைப்பேட்டை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்த பொழுது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவர்கள் நீலகிரி மாவட்டம் குதுர அம்பம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் நாகராஜ் (23), திருமங்கலத்தை சேர்ந்த பாபு என்பவரது மகன் சிவன் (22) என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த 3 மாதங்களாக கோவையில் இரவு நேரங்களில் டவுசர் அணிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் சிவன் என்பவர் கோவையில் கைது செய்யப்பட்ட டவுசர் கொள்ளையன் வீரமணியின் தம்பி என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர்ந்து நாகராஜ், சிவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பெரியநாயக்கன்பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர், துடியலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட நாகராஜ், சிவனிடம் இருந்து 10 பவுன் தங்க நகைகளை சூலூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Share this:

Related posts

ரூ.10 ஆயிரம் கடனுக்கு பல மாதங்களாக அலைக்கழிக்கும் அரசு வங்கி : மன உளைச்சலில் மாற்றுதிறனாளி..

MANIMARAN M

அபராதம் கேட்டு அடாவடி செய்த பேரூராட்சி ஊழியர்கள்… கொரோனா லாக்டவுன்னில் அதிகரிக்கும் கொடுமை

THAVAMANI NATARAJAN

ஒரு கிலோ வெங்காயத்தின் விலை இவ்வளவா?! கண்கலங்க வைக்கும் வெங்காயம்..!

THAVAMANI NATARAJAN

கொரோனா தடுப்பூசி வர்றதுக்குள்ள… தமிழகத்தைவிட்டு தலைதெறிக்க ஓடிடும் போல…!!

NEWSKADAI

மக்களே நாளை முழு ஊரடங்கு… எந்தெந்த கடைகள் எல்லாம் திறந்திருக்கும் தெரியுமா?

NEWSKADAI

குடிபோதையில் கார் ஓட்டிய போக்குவரத்து ஆய்வாளர்… மடக்கி பிடித்த மக்கள்…!!

THAVAMANI NATARAJAN