Newskadai.com
லைஃப் ஸ்டைல்

சர்க்கரை வள்ளி கிழக்கில் இத்தனை சத்துக்களா… இது தெரியாமல் போச்சே…!

sweet potato
Share this:

நொறுங்க தின்றால் நூறு வயது என்பது பழமொழி. ஆனால் இப்போதைய லைப் ஸ்டைலோ உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள டையட்டும், உடற்பயிற்சியும் தான் முக்கியம் என்பது போல் மாறிவிட்டது. டையட்டில் கூட கார்போஹைட்ரேட் உணவுகள் கூடாது என கிழங்கு வகைகளையும் சேர்த்து ஒதுக்குவோர் ஏராளம். கீரைகளைப்போலவே கிழங்கு வகைகளிலும் வைட்டமின்களும், தாது பொருட்களும் நிறைந்து இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக சர்க்கரை வள்ளி கிழக்கில் அடங்கியிருக்கும் சத்துக்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள்…

sweet potato

சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. மேலும் வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.

சர்க்கரை வள்ளி கிழக்கில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஏற்படும் கண்பார்வை குறைபாடுகளை சரிய வாய்ப்பாக அமைகிறது.

சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை வள்ளி கிழங்கில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது.
மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முக்கியமாக நார்சத்து தேவைப்படும். சர்க்கரை வள்ளி கிழங்கில் தேவையான அளவில் நார்சத்து நிறைந்துள்ளதால் உங்கள் குடலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.

சர்க்கரை வள்ளி கிழங்கினை தினமும் உண்டு வந்தால் உங்கள் கரு வளர்ச்சிக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். ஏனெனில் இதில் அதிக அளவில் போலெட்ஸ் நிறைந்துள்ளது. எனவே கருத்தரிக்க விரும்புவர்களுக்கு சர்க்கரை வள்ளி கிழங்கினை கொடுத்து வருவது நல்ல பலனைத் தரும்.

சர்க்கரை வள்ளி கிழங்கினை அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு ஏற்படும் பிரீ ராடிகள் செல் அழிவினை தடுக்க உதவும். மேலும் உங்களை எப்போதும் இளமையுடன் வைக்க உதவும்.

சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக அளவு பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்லெஸ், இரும்புசத்து, போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வரும்பொழுது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்.


Share this:

Related posts

சிறுகதை : ஓட்டு கட்சி – முனைவர் ஆதன் குமார்

NEWSKADAI

மக்களே உஷார்: இதுவும் கொரோனா அறிகுறிகள்தான்… மருத்துவர் விளக்கம்

MANIMARAN M

சேமிக்கிற காசை டபுளாக்க இப்படியெல்லாம் வழியிருக்கா?… இதுவரைக்கும் இதெல்லாம் தெரியாமல் போச்சே…!

NEWSKADAI

சிறுகதை : அசுரப்படை – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

வாடிக்கையாளர்களுக்கு ஆப்புவைத்த ஏர்டெல்… தாறுமாறாக எகிறப்போகும் கட்டணங்கள்…!!

MANIMARAN M

வரம் தரும் விரதம்…சங்கடஹர சதுர்த்தி விரதம்…

THAVAMANI NATARAJAN