Newskadai.com
தமிழ்நாடு

அடுத்தடுத்து அதிர்ச்சி… சிறந்த மருத்துவர் கொரோனா தொற்றால் பலி…

Death
Share this:

கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என உயிரிழந்து வருகிறார்கள், இதனை தொடர்ந்து உலகளவில் சிறந்து விளங்கிய டாக்டர் கே.வரதாசாரி திருவேங்கடம் அவர்கள் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார்,

Dr Thiruvengadam இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் 1950 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்தார், அதன்பின் பல்வேறு மருத்துவம் சார்ந்த நாடுகளில் படித்த இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நெஞ்சு தொடர்பான ஆஸ்த்துமா, அலர்ஜி போன்ற நோய்களுக்கு சிகிச்சை சிறப்பு மருத்துவராக பணியாற்றியவர், இவரின் சிறப்பான சேவையை கவுரவப்படுத்தும் வகையில் 1981ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது. அதை தொடர்ந்து பல்வேறு சர்வதேச விருதுகள் மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டது.

Dr Thiruvengadam

இந்நிலையில் டாக்டர் திருவேங்கடமும் அவரது மனைவியும் கொரோனா தொற்று பாதிப்பால் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் அவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த டாக்டர் திருவேங்கடம் நேற்று உயிரிழந்தார், அவரது உடல் அவர் பணியாற்றிய ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

Dr Thiruvengadam

அவர் உடலுக்கு சக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர், 31 வருடம் மருத்துவ பேராசிரியராக பணியாற்றி பல்வேறு மருத்துவ நிபுணர்களை உருவாக்கிய இவரின் இழப்பு மருத்துவத்துறை மற்றும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

“போலீஸ், அரசு அதிகாரிகளுக்கு மக்கள் நலனில் துளியும் அக்கறை இல்லை”… உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம்…!

MANIMARAN M

12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை…!

THAVAMANI NATARAJAN

ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்கும் “Swiggy”… கொதித்தெழும் சீமான்..

MANIMARAN M

தொடருமா அதிமுக – பாஜக கூட்டணி ?… கமலாலயத்தில் இன்று நடக்கிறது செயற்குழு கூட்டம்…!!

MANIMARAN M

கொரோனா காலத்திலும் குறைவில்லாத சேவை… நாகர்கோவிலில் அசத்தும் ராணுவ வீரர்கள்…!

AMARA

வெடிகுண்டு வீச்சில் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி… முதல்வர் அறிவிப்பு…

MANIMARAN M