Newskadai.com
தேர்டு ஐ

மகனுக்காக மடங்கினாரா ஓ.பி.எஸ்?… திரைமறைவில் எடப்பாடியாருடன் நடத்திய பேரம் சக்சஸ்…!

Share this:

2021ல் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டன. ஆட்சியை பிடிக்க கட்சிகள் கூட்டணி வியூகம் வகுத்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், அதிமுகவில் உள்கட்சி பூசல் வெடித்தது. அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வியால் சர்ச்சை உருவானது. இலைமறைவில் இ.பி.எஸ்., ஓ.பிஎஸ்., அணிகள் இரண்டாக பிரிந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தன. ஒருபுறம் அமைச்சர் பெருமக்களோ ஆளாக்கு ஒரு கருத்து சொல்லி மக்களை குழப்பினர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் நேருக்கு நேராக வார்த்தை போரில் ஈடுபட்டது தொண்டர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் எடப்பாடி பழனிசாமி 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழுவை அறிமுகப்படுத்தினர். அதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 5 பேரும், எடப்பாடி ஆதரவாளர்கள் 6 பேரும் இடம்பிடித்திருந்தனர்.

தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்பதாக தெரிவித்தார். இதனால் அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி வரை “முடியவே முடியாது” என அடம்பிடித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் எப்படி இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டார் என்ற குழப்பம் எழுந்தது.

 

இதையடுத்து கட்சியின் முழு கன்ட்ரோல் ஓ.பன்னீர்செல்வம் கையிலும், ஆட்சியை எடப்பாடி பழனிசாமி கையிலும் கொடுக்க டீல் பேசப்பட்டதாகவும், அதற்கு இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கட்சியை கட்டுப்பாட்டில் எடுக்க பல முறை ஓ.பி.எஸ். முயன்றுள்ள போதும், அதுக்கு எடப்பாடியார் முட்டுக்கட்டை போட்டு வந்ததாக தெரிகிறது. அப்படியிருக்க கட்சியை எப்படி ஓ.பி.எஸ். கட்டுப்பாட்டில் கொடுக்க ஒப்புக்கொண்டிருப்பார் என்ற சந்தேகமும் எழுகிறது.

 

இந்நிலையில் தற்போது தேனி தொகுதி எம்.பி.யாக இருக்கும் தனது மகன் ரவீந்திரநாத்திற்கு மத்திய இணை அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என எடப்பாடியாரிடமும், சமரசத்திற்கு வந்த பாஜகவிடமும் ஓ.பன்னீர்செல்வம் டீல் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தான் ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க ஒப்புக்கொண்டாராம்.


Share this:

Related posts

ஒட்டுமொத்த நாடும் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கிறது… ஆனால் முகேஷ் அம்பானி??

MANIMARAN M

என்னதான் ஆச்சு சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு? தொடர் தோல்வி…!!

MANIMARAN M

அழிவின் விளிம்பில் யானை எனும் பேருயிரி… பாதுகாக்க மறந்த மனித இனம்…!!

MANIMARAN M

பிரசாந்த் பூஷன்: ஒரு ரூபாய் அபராத வழக்கின் ஒப்புதல் வாக்குமூலம்..!!

NEWSKADAI

இந்தியத் தத்துவம்- சிறிய அறிமுகம் : ரிக் வேத சம்கிதை…

NEWSKADAI

புயலைக் கிளப்பும் (CAG) தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி நியமனம்.

MANIMARAN M