கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு வரிசையில் கும்பகோணத்தையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலுத்து வருகிறது. தற்போது சோசியல் மீடியாவில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி ஹேஷ்டேக்குகள் தூள் பறக்கின்றன. அப்படி என்ன இருக்கிறது கும்பகோணத்தில் என தெரிந்து கொள்ளலாம் வாங்க…
கோவில் நகரம் என குறிப்பிடப்படும் கும்பகோணத்தின் சிறப்புகள் ….
கும்பகோணம் என்றாலே கும்பகோணம் டிகிரி காபி தான் அனைவரின் மனதிலும் தோன்றும் ஆனால் தெரியாத பல சிறப்புகளை இங்கு காண்போம்.
கும்பகோணத்திற்கு ‘குடந்தை’ என்ற பெயரும் பெயரும் உண்டு குடமூக்கு என்பதன் மருவுச் சொல்லே குடந்தையாகும், குடந்தை என்ற சொல்லுக்கு ‘வளைவு’ என்ற பொருள் உள்ளது. முக்கிய நதிகளில் ஒன்றாக காவிரி கும்பகோணம் வந்து வளைந்து செல்வதால் இந்த பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
காவிரி கரையில் அமைந்துள்ள கும்பகோணம், சென்னைக்கு 270 கிமீ தெற்கிலும், திருச்சிக்கு 90 கிமீ கிழக்கிலும் தஞ்சாவூருக்கு 40 கிமீ வடகிழக்கிலும் உள்ளது சோழர் காலத்தில் குடந்தை என்று அழைக்கப்பட்டு வந்த கும்பகோணம் ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் விளங்கியது குறிப்பிடதக்கது.
சங்ககாலத்தில் சோழர்கள் தம் நாட்டு மக்களிடம் பெற்ற வரிப்பணத்தை இந்தக் குடந்தை நகரில் வைத்துப் பாதுகாத்து வந்ததாகவும். இக்குடந்தை சங்க்காலச் சோழரின் செல்வக் கருவூலம் எனவும் கூறப்படுகிறது.
வெங்கல கைவினை பொருட்களை உருவாக்கும் கலைஞர்களுக்கு இங்கு பயிற்சி அளிப்பதற்காக கும்பகோணம் நகரமான சுவாமிமலையில் தமிழக கைவினைப்பொருட்கள் மேட்பாட்டுக் கழகம் நிறுவப்பட்டது.
தமிழகத்தில் அமைந்துள்ள எட்டு பேருந்து கோட்டங்களில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகம் செயல்படுகிறது .
கும்பகோணத்தில் பதிவாளர் அலுவலகம், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் மற்றும் போக்குவரத்து அலுவலகங்கள் போன்ற மாவட்டத்திற்க்கு தேவையான தகுதிகளை கும்பகோணம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கும்பகோணத்தில் அதிக திருத்தலங்கள் அமைந்துள்ளது இத்திருத்தலங்களுக்கு நாடுமுழுவதும் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.
இந்தியா முழுவதும் உள்ள கோவில்களில் இல்லாத தனி சிறப்பாக கும்பகோணத்தில் உள்ள திருநறையூர் நாச்சியார் கோவிலில் மங்கள சனியாக குடும்பத்துடன் அருள்பாலிக்கிறார்.
இந்தியாவின் முதல் ஏசி பஸ் நிறுத்தம் கும்பகோணத்தில் கட்டப்பட்டது, இந்தியாவில் 2017ம் ஆண்டு மத்திய அரசால் தூய்மைக்கான ஆய்வு நடத்தப்பட்டது அதில் தமிழகத்தில் 37வது இடத்தை கும்பகோணம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கணித மேதையான ஸ்ரீனிவாச ராமானுஜன் கும்பகோணத்தில் வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.