Newskadai.com
சினிமா

உலக நாயகனை அசிங்கப்படுத்திய லோகேஷ் கனகராஜ்… விஜய்க்கு அடுத்து கமலையும் கவிழ்த்துவிட்ட சம்பவம்…!!

Lokesh
Share this:

“கைதி” பட ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வாய்ப்பு மழை தான். “பிகில்” படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து தளபதியின் அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என மிகவும் ஆர்வமாக காத்திருந்த சமயத்தில், லோகேஷ் கனகராஜை ஓகே செய்தார். விஜய் – லோகேஷ் கனராஜ் முதன் முறையாக இணைந்துள்ள மாஸ்டர் திரைப்படம் முழுவதும் முடிந்துவிட்டது. கொரோனா பிரச்சனை இல்லை என்றால் ஏப்ரல் மாதமே படம் ரிலீஸ் ஆகியிருக்கும், ஆனால் தியேட்டர்கள் திறக்கப்படாததால் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தளபதி ஃபேன்ஸ் செம்ம ஆப்செட்.

Lokesh

இதையடுத்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள அடுத்த படத்தில் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் தனது அடுத்த படத்தின் அப்டேட் குறித்து நேற்று மாலை லோகேஷ் கனராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆண்டவருக்கு நன்றி என பதிவிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், கமல் ஹாசனின் 232வது படத்தை இயக்க உள்ளதை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.

அந்த படத்திற்கு “எவனென்று நினைத்தாய்” என பெயரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி போஸ்டரில் “Once upon a time there lived a ghost” என குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். துப்பாக்கிகளால் கமல் ஹாசனின் முகத்தை டிசைன் செய்தது போன்ற போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில், அந்த போஸ்டர் மெக்கானிக் என்ற ஹாலிவுட்டின் படத்தில் காப்பி என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்தின் 3 போஸ்டர்களும் பல படங்களின் காப்பி என நெட்டிசன்கள் கழுவி ஊற்றிய நிலையில், கமல் ஹாசனிடமும் வேலையை காட்டிவிட்டாரோ லோகேஷ் கனகராஜ் என ஆண்டவரின் ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர்.

Lokesh


Share this:

Related posts

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி… சதா நாடார் மீது வழக்குப்பதிவு…!!

AMARA

விஜய் டி.வி. புகழ் ‘வடிவேல்’ பாலாஜி திடீர் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

NEWSKADAI

மிஷ்கின் பிறந்தநாள் கொண்டாட்டம்… முன்னணி இயக்குநர்கள் கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்..!!

THAVAMANI NATARAJAN

எஸ்.பி.பி. உடல் நிலை கவலைக்கிடம்… கண்ணீர் விட்டு கதறி அழுத பாரதிராஜா… உருக்கமான வீடியோ….!!

NEWSKADAI

எங்கள ஆள என்ன தகுதியிருக்கு?… எம்.பி., எம்.எல்.ஏ.க்கள முதல்ல… ஆவேசமான தங்கர் பச்சான்…!!

NEWSKADAI

நயன்தாரா பட தயாரிப்பாளருக்கு கொரோனா… தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

NEWSKADAI