Newskadai.com
அரசியல்

“வீணாக வாக்கு வங்கியில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளாதீர்கள்”… முதல்வரை மறைமுகமாக எச்சரித்த இல.கணேசன்…!!

Share this:

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும், ஊர்வலம் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் அவரவர் வீடுகளிலே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

BJP

இன்று மாவீரன் ஒண்டி வீரனின் நினைவு தினத்தை முன்னிட்டு, பாஜக அலுவலகத்தில் அவருடைய உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இல.கணேசன், குடிகாரர்கள் கட்டுப்பாடு உடன் மதுக்கடைக்கு வருவார்கள் என நினைக்கும் அரசு, பக்தர்கள் கட்டுப்பாட்டை மீறுவார்கள் என ஏன் நினைக்கிறது என புரியவில்லை என கேள்வி எழுப்பினார்.

BJP

மேலும் படிக்க:http://தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்… அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர் நீதிமன்றம் நம்பிக்கை…!!

விநாயகர் சதுர்த்தியின் போது சில கட்டுப்பாடுகளை விதியுங்கள், அதை முறையாக பின்பற்றுகிறோம். அதை விட்டுவிட்டு விநாயகர் சிலையை வைத்து வழிபடக்கூடாது என கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை. விநாயகரை வழிபடக்கூடிய எவரும் விநாயகருக்கு எதிரான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள். ஏன் அநாவசியமாக வாக்கு வங்கியில் மண்னை அள்ளிப்போட்டுக் கொள்கிறீர்கள் என்பது தான் முதலமைச்சரிடம் நான் கேட்கும் கேள்வி என சூசகமாக எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.


Share this:

Related posts

இது மத்திய அரசின் சூழ்ச்சி… சிபிஎஸ்இ +2 தேர்வு ரத்து குறித்து பகீர் கிளப்பும் வைகோ…!

AMARA

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும். – மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்.

NEWSKADAI

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

NEWSKADAI

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்… தீர்ப்பு குறித்து உயர் நீதிமன்றம் தகவல்…!

NEWSKADAI

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு… கொரோனா நிதியாக ரூ.50 லட்சம் அளிப்பு…!

NEWSKADAI

“சீமானை சும்மா விடமாட்டேன்”… தெருக்கோடியில் உட்கார்ந்து சபதம் போட்ட விஜயலட்சுமி…!!

AMARA