Newskadai.com
அரசியல்

என்னைப் பற்றி யார் கேட்டாலும் சொல்லாதீங்க… சிறைத்துறைக்கு சசிகலா மனு…!

Share this:

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனைப் பெற்று வரும் சசிகலா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தம்மை பற்றிய விவரங்களை வெளியிடக் கூடாது என கர்நாடக சிறைத் துறையினருக்கு மனு ஒன்றை அளித்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் சசிகலா எப்போது விடுதலையாவார் எனவும், சசிகலாவுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது எனவும் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் தன்னை பற்றிய தகவல்களை வெளியிடக் கூடாது என சசிகலா கர்நாடக சிறைத் துறைக்கு மனு அளித்துள்ளார். அதில், வழக்கில் தொடர்பில்லாத 3வது நபர்கள் விளம்பர, அரசியல் நோக்கில் விவரங்களை கேட்கின்றனர். எனவே என்னைப் பற்றிய தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 3 ஆம் நபருக்கு வழங்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். சசிகலாவின் இந்த மனுவையேற்ற சிறைத்துறையினர் நரசிம்மமூர்த்தி கேட்ட கேள்விக்கு பதிலளிக்க கர்நாடக சிறைத் துறையினர் மறுத்துவிட்டனர்.


Share this:

Related posts

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.3 ஆயிரம் கோடி உடனடியாக தேவை… பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தல்…!

AMARA

தினசரி சாப்பாட்டு செலவு 25 கோடியா ?? முதல்வரிடம் கணக்கு கேட்கும் கம்யூனிஸ்ட்…

MANIMARAN M

இவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுங்கள்… சட்டமன்றத்தில் அதிரடி கோரிக்கை வைத்த ஸ்டாலின்…!

AMARA

அரசியல் வெற்றிடத்தை விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார் : தேமுதிக பொருளாளர் பிரேமலதா…

MANIMARAN M

“வழிகாட்டுதல் குழுவில் இல்லாதது மகிழ்ச்சியளிக்கிறது” : அதிரடியாக தெரிவித்த மூத்த அமைச்சர்…!!!

MANIMARAN M

பாஜகவில் அடியெடுத்து வைத்த உடனேயே இப்படியா?…. அண்ணாமலை மீது பாய்ந்தது வழக்கு…!!

NEWSKADAI