Newskadai.com
அரசியல்

“மாஸ்” காட்டிய திமுக மகளிரணி..!!! கைது செய்யப்பட்ட கனிமொழி..!!!

Share this:

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் தலித் குடும்பத்தை சேர்ந்த 19 வயதான பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பரிதாபமாக உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு எதிர்கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் திமுக எம்.பி.கனிமொழி தலைமையில் திமுக மகளிரணியினர் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு கவர்னர் மாளிகை நோக்கி அணிவகுத்து பேரணி சென்றனர். தமிழகத்தில் போராட்டம், பேரணி, மாநாடு போன்றவைகளுக்கு தடை நீடிப்பதால், தடையை மீறி பேரணி நடத்தியதாக திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட திமுக மகளிரணியினரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அந்த போலீஸ் வாகனத்தை மறித்து பெண்கள் மறியல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து கீழே இறங்கி வந்த கனிமொழி எம். பி அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். இதனால் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போலீசார் கனிமொழி எம்பி கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் கைது செய்யப்பட்ட எம்.பி.கனிமொழி விடுவிக்கப்பட்டார்.


Share this:

Related posts

ஓ.பி.எஸ். மகன் பதவிக்கு ஆபத்து?… தேனி எம்.பி. ரவீந்திரநாத் வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

MANIMARAN M

அடுத்த முதல்வர் யார்? அக்.7ல் அறிவிக்க போகும் அதிமுக தலைமை..!!

THAVAMANI NATARAJAN

உயிரைப் பறிக்கும் கழிவுகளை உடனே அகற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும் – பா.ம.க

MANIMARAN M

கொரோனாவுக்கு மத்திய அமைச்சர் மரணம்… அதிர்ச்சியின் உச்சத்தில் பாஜக தலைமை…!!

AMARA

எம்.பி. வசந்தகுமார் உடல் சந்தனபேழையில் நல்லடக்கம்… தாய், தந்தை நினைவிடம் அருகே புதைப்பு…!

AMARA

இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து… தமிழக அரசுக்கு அபாய எச்சரிக்கை விடுத்த சீமான்…!

MANIMARAN M