Newskadai.com
அரசியல்

என்னது அவரா?… மு.க.ஸ்டாலினை அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம்… வேதனையை வெளிப்படுத்திய திமுக…!

Share this:

முன்னாள் எம்.எல்.ஏ.வும், அமமுக கட்சியின் பொருளாளருமான வெற்றிவேல் கடந்த 6ம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெற்றிவேலுக்கு ஏற்கனவே நீரழிவு, உயர் ரத்தம் ஆகிய பிரச்சனைகள் இருந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதலே ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த வெற்றிவேலின் உடல் நிலை நேற்று முதலே மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர் காக்கும் சிகிச்சைகளுடன் சிகிச்சை பெற்று வந்த வெற்றிவேல் இன்று மாலை 6.40 மணி அளவில் உயிரிழந்தார். அவருடைய திடீர் மறைவால் அதிர்ச்சி அடைந்துள்ள அமமுக தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், அ.ம.மு.க. பொருளாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. வெற்றிவேல் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவிற்கு தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் சென்னை மாநகர மேயராக இருந்தபோது – மாமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி, அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை, தேவைகளை மாமன்றத்தில் எடுத்து வைத்து, அவற்றிற்குத் தீர்வு கண்டவர்.

சட்டமன்ற உறுப்பினராக, தான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் தொகுதி மக்களின் பிரச்சினைகளைச் சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமாக எடுத்து வைத்துப் பேசக்கூடியவர்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என உருக்கமாக கூறியுள்ளார்.


Share this:

Related posts

ஊரடங்கு நீட்டிப்பா?… மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை…!

AMARA

“இன்னோவா அல்ல.. ஏரோப்ளேனே வாங்கிக் கொடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது”… எல். முருகனை எள்ளி நகையாடிய நாஞ்சில் சம்பத்…!!

AMARA

“தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ்”… அதிமுகவில் வெடித்தது உச்சகட்ட மோதல்…!!

AMARA

தினசரி சாப்பாட்டு செலவு 25 கோடியா ?? முதல்வரிடம் கணக்கு கேட்கும் கம்யூனிஸ்ட்…

MANIMARAN M

“திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது”… அறிவாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்த கு.க.செல்வம்…!!

NEWSKADAI

பரபரப்பில் அதிமுக…. தனித்தனியே ஆதரவாளர்களை சந்திக்கும் ஓபிஎஸ் இபிஎஸ்…

MANIMARAN M