Newskadai.com
அரசியல்

திமுகவின் முக்கிய பொறுப்பு யாருக்கு?

Share this:

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி ஒன்றாம் தேதியை அடிப்படையாக  கொண்டே வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இதனை தொடர்ந்து  வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் நடப்பாண்டில் தொடங்கியுள்ளது. இதன் அடிப்படையில் நடப்பாண்டில் நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. கொரோனா  தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் 15 நாட்கள் தாமதமாக வெளியிடப்படுவதாக முன்னாள் தேர்தல் ஆணையர்  கோபால்சாமி தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து 2021 ஜனவரி 15ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அரசியல்  கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள், முதல்வர் வேட்பாளர், கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவது போன்ற பல்வேறான  செயல்களில்  ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 3ம் தேதியும், பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 9ம் தேதியும் நடைபெற  உள்ளதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி உயிரிழந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்குப் பிறகு பொதுச் செயலாளர் மற்றும்  காலாவதியான திமுகவின் பொருளாளர் பதவிக்கு புதிய நபர்களை பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது. பேராசிரியர் க.அன்பழகன் வகித்து வந்த  பொதுச்செயலாளர் பதவிக்கு திமுகவின் தற்போதைய பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட  உள்ளார்.
dmk
பொருளாளர் பதவிக்கு ஆ.ராசா, டி.ஆர்.பாலு, எ.வ.வேலு ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு என தகவல் வெளியானது.  இந்த கூட்டத்தில்  திமுகவின் பொதுக்குழு  மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 4,000 க்கும் மேற்பட்டோர்  கலந்து கொள்ள உள்ளனர்.

Share this:

Related posts

திமுக முன்னாள் அமைச்சர் மரணம்… கொரோனாவிலிருந்து மீண்டவரை கொண்டு சென்ற எமன்…!!

AMARA

“தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமே கிடையாது”… முதலமைச்சர் பழனிசாமி அதிரடி…!!

AMARA

ஆறே கேள்விகளில் மோடியை ஆட்டம் காண வைத்த ராகுல் காந்தி…!!

THAVAMANI NATARAJAN

கொரோனாவை வென்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்… 80 வயதிலும் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி…!!

AMARA

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: செப்.21ல் தோழமை கட்சிகளுடன் திமுக ஆலோசனை…!!

MANIMARAN M

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும். – மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்.

NEWSKADAI