திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
திமுக முன்னணி பேச்சாளர்களில் ஒருவராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருப்பவர் தமிழன் பிரசன்னா. பல்வேறு விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் இவரது மனைவி நதியா இன்று (ஜூன் 8) காலை சென்னை எருக்கங்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பிரசன்னா – நதியா தம்பதிகளுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில், 3 குழந்தைகள் உள்ளனர். மனைவி நதியாவின் பிறந்தநாளான இன்று, அதனை சிறப்பாக கொண்டாடி பேஸ்புக்கில் போட வேண்டும் என நதியா கூறியதாக தெரிகிறது. இதற்கு கணவர் பிரசன்னா, கொரோனா பெருந்தோற்று காலம் என்பதால் இந்த ஆண்டு வேண்டாம் என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. அதனால் மனம் உடைந்த நதியா, காலை 10 மணியளவில் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் 174படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.