Newskadai.com
தமிழ்நாடு

மேட்டூரில் ரயில்வே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பெண் பலி… திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் ஆறுதல்…!!

Share this:

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள புதுச்சாம்பள்ளியில் ரயில்வே இருப்புப்பாதை சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கம் போல் கட்டுமான பணி நடைபெற்று வந்த நிலையில், பழைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கிய கவிதா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அறிந்த சேலம் தொகுதி திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும் படியும் தலைமை மருத்துவருக்கு உத்தரவிட்டார்.

மேலும் ரயில்வே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியான கவிதாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டுமென ஆட்சியரிடம் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியளிக்கும் விபத்து வீடியோ இதோ…


Share this:

Related posts

தாரமங்கலத்தில் வரும் 28, 29-ல் முழு கடையடைப்பு… கொரோனாவால் வணிகர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

AMARA

செஞ்சுரி அடிக்க போகுது மேட்டூர் அணை… நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

THAVAMANI NATARAJAN

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா?… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!

NEWSKADAI

+1 மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்…

MANIMARAN M

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்… விதிமுறைகள் குறித்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு…!!

MANIMARAN M

கொரோனா ஊரடங்கும், தளர்வுகளும் – இயல்புநிலைக்கு திரும்புகிறதா தமிழகம்..?

AFRIN