Newskadai.com
அரசியல்

மாஸ்க்கை வைத்து மாஸ் காட்டும் திமுக….நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நூதன போராட்டம்…!!

Share this:

நீட் தேர்வு அச்சத்தால் நேற்று தமிழகத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வால் ஏற்பட்ட அச்சம் காரணமாக மதுரையைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா, தருமபுரியைச் சேர்ந்த ஆதித்யா, திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோதிலால் ஆகியோர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது, தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக எடுத்துக்கூறி வருகின்றனர்.

NEET

இந்நிலையில் இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்க உள்ளது. ஏற்கனவே தமிழக எம்.எல்.ஏ.க்கள் 34 பேரும், 6 அமைச்சர்களும் கொரோனா தொற்றால் மீண்டுள்ளனர். இதனால் சட்டமன்றத்திற்கு பதிலாக கலைவாணர் அரங்கத்தில் பேரவை நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக கூட்டத்தில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அதில் மீண்டும் 3 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

DMK

தற்போது தமிழக சட்டமன்ற கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக Ban NEET Save Tamilnadu students என்ற வாசகம் அடங்கிய மாஸ்க் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


Share this:

Related posts

“நீங்க எல்லாம் பாஜகவுடன் தொடர்பு வச்சிருக்கீங்க”… காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் சீண்டிய ராகுல் காந்தி…!!

AMARA

அடுத்த முதல்வர் யாரென்று?… நாங்கதான் முடிவு செய்வோம்…

MANIMARAN M

நீட் தேர்வு விவகாரம்: பேரவையில் முதல்வர் – ஸ்டாலின் இடையே காரசார விவாதம்…!

AMARA

தமிழக அரசே! பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடி..

MANIMARAN M

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம்… தமிழக அரசுக்கு அதிரடி யோசனை கொடுத்த ராமதாஸ்…!

NEWSKADAI

அரசியல் வெற்றிடத்தை விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார் : தேமுதிக பொருளாளர் பிரேமலதா…

MANIMARAN M