Newskadai.com
அரசியல்

குட்கா வழக்கு : திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து…!!

Stalin
Share this:

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தாராளமாக இருப்பதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. அதை நிரூபிப்பதற்காக 2017ம் ஆண்டு சட்டப்ப்பேரவை கூட்டத்தொடர் நடத்து கொண்டிருந்த போது, அந்த புகையிலை பொருட்களை சபாநாயகரிடம் காண்பிப்பதற்காக திமுகவினர் கொண்டு வந்தனர். இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழு பரிந்துரைத்தது.

Stalin

அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து வழக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிம்னறத்தில் வழக்கு தொடர்ந்து தமிழக அரசின் நோட்டீசுக்கு தடை பெற்றனர். அதன் பின்னர் கடந்த 2017ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழக்கப்பட்டுள்ளது.


குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்ததாக திமுகவினருக்கு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால் மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share this:

Related posts

கொட்டும் மழையிலும் தீயாய் களத்தில் சுழலும் ஸ்டாலின்… ரெயின் கோட், மாஸ்குடன் பக்கா மாஸாக ஆய்வு…!

THAVAMANI NATARAJAN

#BREAKING கொரோனாவால் அமமுக பொருளாளர் வெற்றிவேல் மரணம்…. தீராத சோகத்தில் டிடிவி தினகரன்….!

AMARA

குனிந்து கும்பிட்ட ஓ.பி.எஸ்… கொஞ்சமும் கண்டுக்காத அமித் ஷா… வைரல் போட்டோவை பார்த்து வயிறெரியும் அதிமுக தொண்டர்கள்…!

NEWSKADAI

“தேனி மக்களின் கனவை நிறைவேற்றியே தீருவேன்”… மண்ணின் மைந்தன் ரவீந்திரநாத் குமார் எம்.பி. உறுதி…!!

AMARA

மாஸ்க்கை வைத்து மாஸ் காட்டும் திமுக….நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நூதன போராட்டம்…!!

AMARA

அதிர்ச்சியில் அறிவாலயம்… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்??

AMARA