Newskadai.com
அரசியல்

அதிர்ச்சியில் அறிவாலயம்… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்??

Share this:

திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் பாஜகவிற்கு தாவி இருப்பதாக வெளியான தகவல்கள் கட்சியினரை களக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 1997ம் ஆண்டு அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார் கு.க.செல்வம். தற்போது திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் நின்று ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு கட்சியில் பெரிய செல்வாக்கு இல்லை என்றாலும், சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் எம்.எல்.ஏ. ஒருவர் கட்சி தாவியிருப்பதாக வெளியான செய்தி கழகத் தலைமையை சற்றே அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக கூறப்படுகிறது.

திமுகவில் எப்போதும் கட்சி பதவிகளுக்கு சீனியர்களை தேர்வு செய்வது தான் வழக்கம். அப்படி சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த ஜெ.அன்பழகன் கொரோனாவால் உயிரிழக்க அந்த பதவி தனக்கு தான் கிடைக்கும் என கனவு கண்டார் கு.க.செல்வம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இடையில் புகுந்து குட்டையைக் குழப்பிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினால், அவருக்கு நெருக்கமான சிற்றரசு அந்த பதவியில் அமரவைக்கப்பட்டார். அதனால் அதிருப்தி அடைந்த கு.க.செல்வம் கட்சி மாறியதாக கூறப்படுகிறது.

காலையில் கு.க.செல்வம் டெல்லி பயணம் மேற்கொண்ட போதே அவர் பாஜகவிற்கு தாவப்போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் டெல்லியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கும் பாஜகவில் முக்கிய பதவி கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எவ்வித ஆனால் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.


Share this:

Related posts

“அதிமுகவில் அடுத்த முதல்வர் யார்?”… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியீடு…!!

AMARA

நீட் தேர்வை நடத்த முடியாதுன்னு அறிவீங்க… அடுத்தடுத்து அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஸ்டாலின்…!!

AMARA

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை….

MANIMARAN M

ப.சிதம்பரம் பொண்டாட்டி வீட்டு முன்னாடி போய் போராடுங்க… ஸ்டாலினை சீண்டும் எச்.ராஜா….!!

AMARA

பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை…!!

AMARA

“இந்திய மாணவர்களின் எதிர்காலம் இனி வெளிச்சமாகும்”… பிரதமர் மோடி பெருமிதம்…!!

THAVAMANI NATARAJAN