கொரோனா நெருக்கடி காலத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் அதை எல்லாம் காதில் வாங்காத மத்திய அரசு, நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. அதற்கு முதல் நீட் தேர்வு அச்சத்தால் மதுரையைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா, திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோதிலால், தருமபுரியைச் சேர்ந்த ஆதித்யா ஆகிய மூவர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஏற்கனவே நீட் தேர்வு அச்சத்தால் கோவையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் உட்பட இந்த ஆண்டு மட்டும் 5 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் மிகப்பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. தமிழக மாணவர்களின் உயிரைக் காக்கும் நோக்குடன் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கலைவாணர் அரங்கில் தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து, ஒரு நிமிட மெளன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது.
மேலும் படிக்க: http://ப.சிதம்பரம் பொண்டாட்டி வீட்டு முன்னாடி போய் போராடுங்க… ஸ்டாலினை சீண்டும் எச்.ராஜா….!!
இதற்கு முன்னதாக சட்டமன்றத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், இங்கு பலரது மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. நீட் தேர்வினால் எண்ணற்ற மாணவ – மாணவிகள், தற்கொலை செய்துகொண்டு தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் கொடுமை தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.எனவே இந்த இரங்கல் தீர்மானத்தில் அவர்களுடைய பெயர்களையும் சேர்த்துத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் எனது அந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது; கண்டனத்துக்குரியது என ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.