Newskadai.com
அரசியல்

திமுக முன்னாள் அமைச்சர் மரணம்… கொரோனாவிலிருந்து மீண்டவரை கொண்டு சென்ற எமன்…!!

Share this:

திமுகவின் ஆணிவேர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ரகுமான் கான். தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த இவருடைய வாள் வீச்சு போன்ற உரை வீச்சை கேட்பதற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. சட்டப்பேரவையிலும், மேடை பேச்சுக்களில் இடியாய் முழங்கியவர். சென்னை சேப்பாக்கம் தொகுதியில் 1977,1980,1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுகவிற்கு ஹாட்ரிக் வெற்றி பெற்று கொடுத்தவர்.

1989ம் ஆண்டு சென்னை பூங்கா நகர், 1996ல் ராமநாதபுரம் தொகுதிகளில் வென்று எம்.எல்.ஏ.வாக சேவையாற்றியவர். இதுவரை 5 முறை எம்.எல்.ஏ.வாக வென்றுள்ள ரகுமான், 1996ம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதியின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பொறுப்பெற்றுள்ளார்.

ரகுமான் கானுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 2 வாரமாக அவருக்கு சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததை அடுத்து ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து அவர் மீண்டு விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், நேற்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராயப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை 8 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Share this:

Related posts

இந்த 15 பொருட்களுக்கும் இதுதான் அதிகபட்ச விலை… தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

AMARA

இனி இவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்வு… மு.க.ஸ்டாலின் அதிரடி…!

AMARA

ஜெ.அன்பழகன் மகனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு…!

NEWSKADAI

மக்களே மகிழ்ச்சியான செய்தி… ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் எப்போது கிடைக்கும் தெரியுமா?

AMARA

அதிர்ச்சியில் அறிவாலயம்… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்??

AMARA

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும். – மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்.

NEWSKADAI