Newskadai.com
அரசியல்

வேட்டியை மடித்துக் கட்டி வயலில் இறங்கிய ஸ்டாலின்… விவசாய பெண்களிடம் குறை கேட்பு…!

Share this:

வேளாண் சட்ட திருத்த மசோத்தாக்களுக்கு எதிராக திமுக மற்றும் தோழமை கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் அம்பி பகுதியில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

DMK

கொரோனா நேரத்தில் போராட்டம் நடைபெறுவதால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக 90 விவசாயிகள் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் முறையாக மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வேளாண் சட்ட திருத்த மசோதக்களை திரும்ப பெற வலியுறுத்தும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.

DMK

இதற்கு முன்னதாக காஞ்சிபுரத்தில் போராட்டத்தில் பங்கேற்க சென்ற ஸ்டாலின், வழியில் வயலில் வேலை பார்க்கும் பெண்களை சந்தித்தார். அவர்களிடம் வேளாண் சட்ட திருத்த மசோதா குறித்தும், அவர்களுக்கு கொரோனா நெருக்கடி காலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்தார்.


Share this:

Related posts

மாஸ்க்கை வைத்து மாஸ் காட்டும் திமுக….நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நூதன போராட்டம்…!!

AMARA

#GoBackModi தமிழகத்தைத் தொடர்ந்து பீகாரிலும் டிரெண்டிங்.!!!

MANIMARAN M

இழி துரோக வரலாற்றில் இடம் பெறுவாய்… 800 பட விவகாரத்தில் விஜய் சேதுபதிக்கு ராமதாஸ் எச்சரிக்கை…!

NEWSKADAI

பிரணாப் முகர்ஜி உடலுக்கு இன்று இறுதி சடங்கு…. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நல்லடக்கம்…!

AMARA

மோடி திட்டத்தில் மோசடி: கிருஷ்ணகிரியில் இதுவரை ரூ.1.76கோடி மீட்பு…!!

NEWSKADAI

“எங்க கோவணத்தையும் உருவிடாதீங்க”… நாமம் போட்டு விவசாயிகள் போராட்டம்..!!

MANIMARAN M