Newskadai.com
அரசியல்

திமுக கூட்டணியில் ‘திடீர் ட்விஸ்ட்’… காங்கிரஸ் கட்சிக்கு இவ்வளவு சீட்டு தானா?

DMK
Share this:

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்னதாகவே பெரும்பாலான கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், சுற்றுப்பயணம் என தேர்தல் களத்தை அனல் பறக்க வைத்துள்ளன. இந்நிலையில், திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

DMK

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகள் இருக்கின்றன. தற்போது காங்கிரஸ் – திமுக இடையே சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் கூட்டணியில் நீடிப்பது உறுதியாகியுள்ளது. 2011ம் ஆண்டு தேர்தலில் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 5 இடங்களில் மட்டுமே வென்றது. மீண்டும் 2016ல் நடந்த தேர்தலிம் 41 இடங்களில் வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, இதனால் தான் திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதாக விமர்சனங்கள் எழுந்தன. தற்போது சுதாரித்துக் கொண்ட திமுக, காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை குறைவான இடங்களையே ஒதுக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு – 25, மதிமுக, விசிகவிற்கு தலா ஆறு இடங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உதிரிக்கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு 2 தொகுதிகளும், பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக் கட்சி, பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியோருக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பொன்.குமாருக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கியது போக, வேறு சில கட்சிகள் இணைந்தால் அவற்றிற்கு 3 தொகுதிகள் என பிரிக்கப்பட்டுள்ளதாம். கூட்டணி கட்சிகளுக்கு பிரித்துக் கொடுத்தது போக இந்த முறை 170 தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதாகவும், உதிரி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


Share this:

Related posts

வேட்பாளர்களின் “தேர்தல் செலவுக்காக”… கமல் ஹாசன் எடுத்த ‘அதிரடி’ முடிவு…!

MANIMARAN M

“தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை”… அமைச்சர் செங்கோட்டையன் உறுதி….!!

AMARA

ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள்  அவரவர் விருப்பம் போல மற்ற கட்சியில் இணையலாம் என அதிரடி அறிவிப்பு…!

THAVAMANI NATARAJAN

இன்று கூடுகிறது அதிமுக உயர்மட்டக் குழு : எதிர்ப்பார்ப்பில் தமிழக அரசியல்…

MANIMARAN M

மோடி திட்ட மோசடிக்கு.. இந்த அறிவிப்புதான் காரணம்…!! முதல்வரின் அதிரடி குற்றச்சாட்டு…

MANIMARAN M

எக்மோ சிகிச்சையிலும் பின்னடைவு… தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு…!

AMARA