Newskadai.com
அரசியல்

#BREAKING விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிறார் விஜயகாந்த்… உற்சாகத்தில் துள்ளிகுதிக்கும் தேமுதிக தொண்டர்கள்…!

vijayakanth
Share this:

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, கடந்த 22ம் தேதி மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜயகாந்திற்கு தொற்று உறுதியானதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் நேற்று விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவரும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சற்று நேரத்திற்கு முன்பு இருவரது உடல் நிலை குறித்தும் மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் செப்டம்பர் 28ம் தேதி கோவிட் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, நோய்தொற்று உறுதியாகி சென்னை மியாட் மருத்துவமனையில் செப்டம்பர் 29ம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். பிரேமலதா விஜயகாந்த் முதல் நிலை பரிசோதனைக்குப் பின் தேமுதிக நிறுவனத்தலைவர் மற்றும் கழக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது நோய்தொற்றுக்கான அறிகுறி இல்லை. தொடர் மருத்துவச் சேவைகள் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறது.


Share this:

Related posts

“தேனி மக்களின் கனவை நிறைவேற்றியே தீருவேன்”… மண்ணின் மைந்தன் ரவீந்திரநாத் குமார் எம்.பி. உறுதி…!!

AMARA

பிறந்தநாள் கொண்டாட்டம்… கட்சி தொண்டர்களுக்கு கேப்டன் போட்ட அதிரடி உத்தரவு…!!

THAVAMANI NATARAJAN

தர்ம யுத்தத்தை துவங்குவாரா? ட்வீட் போட்டு எச்சரிக்கும் ஓபிஎஸ்..!! அதிமுகவினர் அதிர்ச்சி…

NEWSKADAI

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!!!

MANIMARAN M

பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை…!!

AMARA

மீண்டும் பெரியார் சிலை அவமதிப்பு… காவிச்சாயம் பூசி, காலணி மாலை அணிவித்த சமூக விரோதிகள்…!

AMARA