Newskadai.com
அரசியல்

பிறந்தநாள் கொண்டாட்டம்… கட்சி தொண்டர்களுக்கு கேப்டன் போட்ட அதிரடி உத்தரவு…!!

vijayakanth
Share this:

திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுசெயலாளருமான விஜயகாந்த் தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதுகாப்பு கருதி கழக தொண்டர்களும், பொது மக்களும் அவரவர்கள் இருக்குமிடத்திலேயே பிறந்தநாளை கொண்டாட வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளை “வறுமை ஒழிப்பு தினமாக’’ கடைபிடித்து வருகிறேன். தற்போது கொரோனா கால கட்டம் என்பதால் இந்த முறை சுகாதாரத்திற்கு முக்கியதுவம் கொடுக்கும் வகையில் கேப்டன் விஜயகாந்த் கிராமபுற சுகாதார திட்டத்தை, வறுமை ஒழிப்பு தினத்தில் கடைபிடிக்க வேண்டும். மக்களின் முதுகெழும்பான கிராமத்தில் இருந்து இத்திட்டம் தொடங்கப்படும். ஒரு ஒன்றியத்தில் முன்மாதிரியாக ஒரு கிராமத்தை தத்தெடுத்து கிராமங்களை தூய்மைப்படுத்த வேண்டும்.

 

சோடியம், ஹைப்போ குளோரைட் அல்லது பிளீச்சிங் பவுடரை நீரில் கலந்து கிராம தெருக்களில், ஸ்பிரேயர் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் கிராமங்கள்தோரும் கபசுர குடிநீர், முககவசம், கையுரை, சோப்புகள், சானிடைசர், கொசு மருந்து தெளிப்பது மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரண உதவி, மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில்கள் வழங்க வேண்டும்.

ஆதரவற்றவர்களுக்கு தேவையான துணிமணிகள் வழங்குவது, ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் இல்லங்களுக்கு உணவளிப்பது, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவது, குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவது, விபத்தை தவிர்க்கும் வகையில் வேகத்தடைக்கு கலர் பெயின்ட் அடிப்பது மற்றும் கொரோனா உபகரணங்களை வழங்குவது போன்ற பணிகளையும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களை பாராட்டுவது ஆகிய திட்டங்களையும், கிராம திட்டத்தின் மூலமாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார், மேலும் தையல் மிஷின், திருமணத்திற்கு உதவிகள், சலவை பெட்டி வழங்குவது மற்றும் நாடக கலைஞர்கள் மாணவர்களுக்கென பல உதவிகளை பல ஆண்டுகளாக கழக நிர்வாகிகள் செய்து வருவதாகவும் தெரிவித்த அவர் அதே போல இந்த ஆண்டும் தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக இந்த திட்டங்களை செயல்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார்.


Share this:

Related posts

கல்வி கொள்கையின் மாற்றத்தை அனைவரும் ஏற்க வேண்டும்… புதிய கல்விக்கொள்கை மாநாட்டில் பிரதமர் மோடி உரை…!!

THAVAMANI NATARAJAN

“சுப்ரீம் கோர்ட்ல பாத்துக்கலாம் ” நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த 7 மாநில முதல்வர்கள்

MANIMARAN M

நற்செய்தி..! தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்

MANIMARAN M

தேனியில் போஸ்டர்… ஓபிஎஸ் – இபிஎஸ் வீடுகளில் மாறி, மாறி அமைச்சர்கள் ஆலோசனை… அதிமுகவில் பதற்றம்…!!

AMARA

ஜனநாயகம் காக்க உறுதியேற்போம்…! மு தமிமுன் அன்சாரி எம்எல்ஏ சுதந்திர தின வாழ்த்து செய்தி…

MANIMARAN M

வேதா நிலையம் #81 போயஸ் கார்டன்….

NEWSKADAI