Newskadai.com
அரசியல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!!!

Vijaykanth
Share this:

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, கடந்த 22ம் தேதி மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு செப்டம்பர் 28ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, அதில் கொரொனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது அவருக்கும் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர் இருவரும் கடந்த 2 ஆம் தேதி வீடு திரும்பினர். இந்த நிலையில் நேற்றிரவு விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 15 நாட்கள் கழித்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம். கேப்டன் நலமுடன் உள்ளார்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

3 1/2 மணி நேரத்தில் 7 மசோதாக்களை நிறைவேற்றி சாதனை படைத்த பாஜக அரசு

MANIMARAN M

இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து… தமிழக அரசுக்கு அபாய எச்சரிக்கை விடுத்த சீமான்…!

MANIMARAN M

மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு : அரசுக்கு எல்.முருகன் வைத்த அதிரடி கோரிக்கை…!

MANIMARAN M

விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவிற்கு கொரோனா… அதிர்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்…!

AMARA

ஓ.பி.எஸ். முகமூடியுடன் குவியும் தொண்டர்கள்… இ.பி.எஸ்.க்கு ஆதரவாக முழக்கம்…. அதிமுக செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு…!

AMARA

“இந்தி தெரிந்தால் தான் இந்தியரா..?” கன்னடர்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் போர்கொடி…

MANIMARAN M