Newskadai.com
அரசியல்

விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவிற்கு கொரோனா… அதிர்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்…!

Share this:

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, கடந்த 22ம் தேதி மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த விஜயகாந்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Vijaykanth

இதையடுத்து தேமுதிக வெளியிட்ட அறிக்கையில், “வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் விஜயகாந்த் உள்ளார்” என குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து விஜயகாந்தின் வீடு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ள விஜயகாந்த் இன்று மாலை வீடு திரும்ப உள்ளதாக அவருடைய மைத்துனர் சுதீஷ் தெரிவித்திருந்தார். இந்த செய்தி தேமுதிக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தை கவனித்து வந்த அவருடைய மனைவியும் பொருளாளருமான பிரேமலதாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி தேமுதிக தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Share this:

Related posts

மோடி திட்ட மோசடிக்கு.. இந்த அறிவிப்புதான் காரணம்…!! முதல்வரின் அதிரடி குற்றச்சாட்டு…

MANIMARAN M

இன்று கூடுகிறது அதிமுக உயர்மட்டக் குழு : எதிர்ப்பார்ப்பில் தமிழக அரசியல்…

MANIMARAN M

அதிர்ச்சியில் அதிமுக தலைமை… ஒரே நாளில் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா…!

AMARA

முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்… தாயார் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி…!

NEWSKADAI

ஒரே ஒரு போஸ்டர்… விஜய்யின் டோட்டல் இமேஜை குளோஸ் செய்த ரசிகர்கள்…!!

AMARA

ரஜினியை தொடர்ந்து அரசியலுக்கு வரப்போகும் விஜய்!? சத்தமே இல்லாம நடக்கும் ரகசிய ஆலோசனை…

NEWSKADAI