Newskadai.com
அரசியல்

எப்படியிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்… தேமுதிக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!

vijayakanth
Share this:

கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், சுகாதாரத்துறையினர், மாவட்ட ஆட்சியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் அதனால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேல்போல் மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள் என பலரும் அடுத்தடுத்து பாதிக்கப்படுவது மக்களிடையே அச்சத்தை அதிகரித்து வருகிறது.

Vijayakanth

கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், கடந்த 14ம் தேதி தனது வீட்டில் நடைபெற்ற கட்சியின் 14ம் ஆண்டு விழாவில் பங்கேற்று கொடியேற்றி வைத்தார். நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்து வரும் விஜயகாந்த், கட்சி தொண்டர்களை சந்தித்தது அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

vijayakanth

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக, சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தற்போது தேமுதிக கட்சி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

DMDK

அதில், “வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் விஜயகாந்த் உள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


Share this:

Related posts

“அக்கா எனும் அம்மாவை கொரோனாவிடம் இருந்து காக்க தவறிவிட்டேன்”… திருமாவளவன் உருக்கம்…!!

AMARA

தொடருமா அதிமுக – பாஜக கூட்டணி ?… கமலாலயத்தில் இன்று நடக்கிறது செயற்குழு கூட்டம்…!!

MANIMARAN M

“சுப்ரீம் கோர்ட்ல பாத்துக்கலாம் ” நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த 7 மாநில முதல்வர்கள்

MANIMARAN M

பாஜகவினருக்கு அடுத்த அதிர்ச்சி… கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா… மகளையும் விட்டு வைக்காத சோகம்…!!

AMARA

பாஜக தலைவர் எல்.முருகனுடன் திடீர் சந்திப்பு… முதல்வர் வீட்டில் நடந்தது என்ன?

THAVAMANI NATARAJAN

எஸ்.வி.சேகரின் ஆசையை விரைவில் அதிமுக அரசு நிறைவேற்றும்

THAVAMANI NATARAJAN