திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு அருகே அமைந்துள்ள அக்ராபாளையம் கிராமத்தில் வசித்து வரும் பரிமளா என்ற மாணவி, ஆரணிக்கு அருகிலுள்ள பெரணமல்லூர் கிராமத்திலுள்ள தனது உறவினர் உதவியில் அவர்கள் வீட்டிலே தங்கி அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார், கடந்த மாதம் வெளியான 12ம் வகுப்பு தேர்வு முடிவில் இவர் 502/600 பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.
இவரது குடும்பத்தில் அப்பா, அண்ணன் இருவரும் அந்த கிராமத்தில் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவரது அம்மாவிற்கு காது கேட்காதவர், ஏழ்மையில் வாழ்ந்து வந்த இவர்களுக்கு தனது மகள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பள்ளியில் முதல் மாணவியாக வந்தது மகிழ்ச்சியை கொடுத்தாலும், மேற்படிப்பு படிப்பிற்க்கு அனுப்ப வசதியில்லையே என்ற வருத்தம் இருந்தது.
இந்நிலையில் மாணவி பரிமளா திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அவர்களுக்கு ஓரு கடிதம் எழுதினார், அதில் தங்களின் குடும்ப நிலவரம் குறித்தும் தான் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தன் ஐ.ஏ.எஸ் படிக்க விரும்புவதாகவும் அதற்கு உதவி செய்ய வேண்டியும் எழுதி அனுப்பினார்.
மாணவி கடிதத்தை படித்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பரிமளாவின் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்தார், பள்ளியில் முதல் மாணவியாக வந்த பரிமளாவின் பட்டப்படிப்பு மற்றும் விடுதிக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டார். பரிமளாவின் ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்கும் வகையில் மேற்படிப்பு படிக்க செலவினங்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் தேர்விக்கான பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தார்.
பரிமளாவின் குடும்ப ஏழ்மை நிலையை அறிந்த மாவட்ட ஆட்சியர் பரிமளாவின் வாழ்வில் பசுமை மலர பசுமை வீடு கட்டும் திட்டத்திற்கான ஆணையையும் வழங்கியுள்ளார். இந்நிகழ்வு பொது மக்களிடையே நெகிழ்ச்சியையும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அவர்கள் இது போல் பல்வேறு உதவிகளை அந்த மாவட்டத்தில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
;t